பேராசைப்பட்டு கண்டிஷன் போட்ட விஜயின் மாமா!.. சவால் விட்டு மண்ணை கவ்விய மைக் மோகன்!...
பெங்களூரை சேர்ந்தவர் நடிகர் மோகன். 1980ம் வருடம் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூடுபனி என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். அதன்பின் நெஞ்சத்தை கிள்ளாதே, கிழிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை என எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதில், பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் 125 நாட்கள் ஓடி வெள்ளி விழா படமாக அமைந்தது.
அதன்பின் 1999ம் வருடம் வரை பல திரைப்படங்களிலும் மோகன் நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் காதல் கதைகளே. மோகன் வருவதற்கு முன் அவரிடமிருந்து மைக் கமலிடம் இருந்தது. கமல் நடிக்கும் படங்களில் தொடர்ந்து அவர் மைக் வைத்து பாடுவது போல ஒரு பாடல் இருக்கும்.
இதையும் படிங்க: சிவாஜி எப்படி கதையை தேர்ந்தெடுப்பார் தெரியுமா?!.. ரஜினி, விஜய், அஜித் இவர்கிட்ட கத்துக்கணும்!..
மோகன் வந்த பின் அந்த மைக் அவரின் கைக்கு மாறியது. மோகன் நடித்த பெரும்பாலான படங்களில் மைக்கை வைத்துக்கொண்டு பாடுவது போல ஒரு பாடல் காட்சி கண்டிப்பாக இருக்கும். அதனால்தான் அவரை மைக் மோகன் என பலரும் அழைத்தார்கள். மோகன் பாடினால் அது அவரே பாடுவது போல இருக்கும். நன்றாக கவனித்தால் அவரின் வாய் மட்டுமல்ல.. தொண்டையும் நடிக்கும்.
பல படங்களிலும் மோகன் நடித்திருந்தாலும் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் பாடகர் சுரேந்தர். இவர் நடிகர் விஜயின் சொந்த தாய் மாமா. அதாவது ஷோபா சந்திரசேகரின் தம்பி ஆவார். ஒருகட்டத்தில் ‘என் குரலால்தான் மோகனின் படங்கள் ஓடுகிறது. எனவே, அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் பாதி எனக்கு கொடுங்கள்’ என கேட்டார் சுரேந்தர்.
இதையும் படிங்க: ரீ எண்ட்ரியில் ஸ்கோர் செய்யும் மோகன்!.. கோட்டைவிட்ட ராமராஜன்!.. சாதிக்குமா சாமானியன்?…
இது மோகனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ‘என் படம் வெற்றி அடைவதற்கு இளையராஜாவின் பாடல்கள் மற்றும் அழகாக பாடும் எஸ்.பி.பியும் குரலும் கூட காரணம். அவர்களும் இப்படி கேட்டால் என்ன செய்வது?.. சினிமா ஒரு கூட்டு முயற்சி. சுரேந்தர் இப்படி கேட்பதில் நியாயம் இல்லை’ என பேட்டிக் கொடுத்தார். பதிலுக்கு சுரேந்தர் பேட்டி கொடுப்பார். கடைசியில் முட்டிக்கொள்ள ‘இனிமேல் என் படத்திற்கு நானே குரல் கொடுப்பேன்’ என சொந்த குரலில் பேசினார் மோகன்.
ஆனால், மோகனின் நிஜ குரல் ரசிகர்களை கவரவில்லை. ‘இதுவா மோகனின் குரல்?’ என முகம் சுழித்தார்கள். அதுவே மோகனின் மார்க்கெட் சரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மோகன் குரல் கொடுத்து வெளிவந்த சில படங்கள் வெற்றியை பெறவில்லை. அதோடு, அவரை பற்றிய வதந்திகளும் சேர்ந்துகொள்ள அவரின் மார்க்கெட் காலியானது. 20 வருடங்களுக்கு பின் இப்போது கோட் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் மோகன்.