எல்லாமே பொய்!.. அஜித்துக்கு இதுதான் பிரச்சனை!. சுரேஷ் சந்திரா என்ன சொல்றார் பாருங்க!...

by சிவா |
ajith kumar
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் அஜித். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 2 மாதங்களாக அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு நடந்த நிலையில் சமீபத்தில் படக்குழு சென்னை திரும்பியது. லைக்காவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

மேலும், மீண்டும் அஜித் தனது பைக் பயணத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார் எனவும் செய்திகள் கசிந்தது. ஆனால், திடீரென நேற்று இரவு அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். முதலில் அது வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை என சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினியின் புகழை சொன்ன வைரமுத்துவின் பாடல்கள்! இந்த பாடல்கள் மட்டும் இல்லைனா தலைவரின் நிலைமை?

ஆனால், அஜித்தின் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் ஐசியூ வார்டில் இருப்பதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது. இது அஜித்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொலைக்காட்சிகள் முதல் ஊடகங்கள் வரை எல்லாரும் இந்த செய்தியை வெளியிட்டனர்.

ajith

ajith

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ‘வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யத்தான் அஜித் மருத்துவமனைக்கு போனார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காதின் அருகே மூளைக்கு செல்லும் நரம்பு வீக்கம் அடைந்திருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க: நயனுக்கு டைவர்ஸெல்லாம் இல்ல…அந்த போஸ்டுக்கு பின்னால் வேற விஷயம் இருக்கு.. அனத்தாம இருங்கப்பா!

இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடனடியாக நேற்று இரவே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்’ என சொல்லி இருக்கிறார். மேலும், சில நாட்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதால் மருத்துவமனையிலேயே இருக்கிறார்.

மற்றபடி அவர் மூளையில் கட்டி அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது என சொல்வதில் உண்மையில்லை. ஓய்வு முடிந்து அடுத்த வாரம் அஜித் அசர்பைசான் நாட்டில் நடக்கும் விடாமுயற்சி படப்ப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்’ என அவர் கூறியுள்ளார்.

Next Story