விடாமுயற்சி படப்பிடிப்பில் கவிழ்ந்த ஜீப்!.. அஜித்துக்கு என்னாச்சி?!.. வெளியான அதிர்ச்சி வீடியோ!..

அஜித் இப்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு முன்பு அசைர் பைசான் நாட்டில் துவங்கியது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், பிக்பாஸ் புகழ் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறார். பல பிரச்சனைகள், பனிப்புயல், மழை உள்ளிட்ட பல தடங்கல்களுக்கு இடையே இந்த படம் உருவாகி வருகிறது. பல நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் அஜித்தின் கால்ஷீட் வீணானது.
இதையும் படிங்க: விஜயகாந்தின் பலம் – பலவீனம் என்ன?!. அட இதுக்கு கேப்டனே சொன்ன பதிலை பாருங்க!..
ஒருபக்கம், லைக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிநெருக்கடி காரணமாக சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பினார். இதனால், விடாமுயற்சி படமே டிராப் என செய்திகள் கசிய துவங்கியது. இதற்கிடையில் அஜித்துக்கு ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அதோடு, மீண்டும் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு உலகை சுற்ற போய்விட்டார். எனவே, விடாமுயற்சி படம் மீண்டும் துவங்குமா என்கிற சந்தேகமே பலருக்கும் ஏற்பட்டது. இப்படத்தின் அப்டேட் கிடைக்காமல் அஜித் ரசிகர்களும் சோர்ந்து போனார்கள். இந்நிலையில்தான், அஜித்தின் மேனேஜர் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடார்பான வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
இதில், ஆர்வை ஜீப்பில் வைத்துகொண்டு அஜித் ஜீப்பை வேகமாக ஓட்டி செல்கிறார். அப்போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்கிறது. இதைப்பார்த்து பதறிப்போன படக்குழு ஜீப்பை நோக்கி ஓடுகிறது. அஜித்துக்கும், ஆரவுக்கும் என்னாச்சி என்பது தெரியவில்லை.
இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் ‘நீ சும்மா வந்து நின்னாலே போதும் தல. நாங்க பார்ப்போம். இவ்வளவு ரிஸ்க்லாம் எடுக்க வேண்டாம்’ என பதிவிட்டு வருகிறார்கள். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 10ம் தேதி மீண்டும் அசர்பைசான் நாட்டில் துவங்கும் என்கிற செய்தியும் இப்போது வெளியாகி இருக்கிறது.