வணங்கான் கொடுத்த அடி.. இனி இவனுங்கள நம்பக் கூடாது.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு

suresh (1)
Vanangan:அருண் விஜய் நடிப்பில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான திரைப்படம் வணங்கான். பாலா இயக்கத்தில் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. பாலாவின் படைப்புகளில் எத்தனையோ ஹிட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. சேது, பிதாமகன் ,நான் கடவுள் ஆகிய திரைப்படங்களுக்கு இப்போது வரை ரசிகர்களிடையே ஒரு தனி இடம் உண்டு. அப்படி இந்த மாதிரியான படங்களை வைத்து தான் வணங்கான் திரைப்படத்தையும் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இது கலவையான விமர்சனங்களையே பெற்றது .வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறவில்லை. இந்த படத்தைப் பொறுத்த வரைக்கும் ஆரம்பத்தில் கம்மிட்டானது சூர்யா தான் .அவரை வைத்து சில நாட்கள் ஷூட்டிங் செய்தார் பாலா. அதன் பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து விலக அருண் விஜய் இந்த கதைக்குள் வந்தார். ஒரு பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு வகையில் நஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும். இந்த நிலையில் அடுத்து சுரேஷ் காமாட்சி எந்த படத்தை எடுக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரேவதி ,விதார்த், லிஜாமோல் ஆகியோர் நடிப்பில் ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி .
கே எஸ் அதியமான் தேவயானியை முதன் முதலில் அறிமுகம் செய்தவர். தொட்டாச்சிணுங்கி படத்தை எடுத்தவர் தான் கே எஸ் அதியமான். அவரை வைத்து தான் படத்தை எடுக்கப் போகிறாராம் சுரேஷ் காமாட்சி. அதுமட்டுமல்ல விஷாலை வைத்தும் ஒரு படத்தை எடுக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது .கூடிய சீக்கிரம் சுரேஷ் காமாட்சியின் புதிய பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கே எஸ் அதியமான் சமீபகாலமாக எந்த படங்களையும் அவர் இயக்கவில்லை. தொட்டாசிணுங்கி படத்தை அவர் இயக்கியே 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதனால் அவருடைய படைப்பு என்பது இப்போதுள்ள இளைஞர்களுக்கு எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை .அதனால் எப்படிப்பட்ட கதையாக இந்த படம் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.