எந்த தைரியத்துல வந்த? ரஜினியை தேடி வந்தது குத்தமா? பாலசந்தர் கேட்ட கேள்வியால் ஆடிப்போன இயக்குனர்
Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இன்று இந்தியாவே போற்றும் நடிகராகவும் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சாதாரண கண்ட்ரக்டராக இருந்தவர் இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் என்றால் எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருப்பார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
வில்லனாக , இரண்டாவது நாயகனாக, நடிகராக , சூப்பர் ஸ்டாராக என மாபெரும் ஆளுமையாக தற்போது ரஜினி போற்றப்படுகிறார். அவரை பின்பற்றி பல இளம் தலைமுறை நடிகர்கள் சினிமாவில் காலெடி எடுத்து வைக்கின்றனர். தன் ரசிகர்களுக்கு தான் என்ன செய்தால் பிடிக்கும்? எப்படி நடித்தால் பிடிக்கும் என்பதை துள்ளியமாக அறிந்து வைத்திருப்பவர்.
இதையும் படிங்க: ரஜினிக்கு பயத்தை காட்டிய ராமராஜன்… ரகசியத்தை கசிய விட்ட கே.எஸ்.ரவிக்குமார்!..
ரசிகர்களுக்கான படமாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். ரஜினியின் படங்களில் மாஸ், க்ரேஸ், ஸ்டைல் என எல்லாமே நிறைந்து கிடக்கும். அந்த வகையில் ரஜினியின் கெரியரில் மறக்க முடியாத படமாக இருப்பது அண்ணாமலை. கவிதாலயா தயாரிப்பில் உருவான அந்தப் படத்தை முதலில் வசந்த் தான் இயக்குவதாக இருந்தது.
ஆனால் சில பல காரணங்களால் அவர் இந்தப் படத்தை விட்டு விலகினார். அதன் பிறகு சுரேஷ் கிருஷ்ணாவை பாலசந்தர் அணுகினார். அப்போது ஹிந்தியில் பிஸியாக இருந்த சுரேஷ் கிருஷ்ணாவிடம் பாலசந்தர் ‘உனக்கு 48 மணி நேரம்தான் டைம். அதற்குள் பதிலை சொல்’ என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஆறடி சந்தக்கட்ட போல உடம்பு!.. அழகை காட்டி இழுக்கும் மாஸ்டர் பட நடிகை மாளவிகா!…
சுரேஷ் கிருஷ்ணாவும் சரி என சொல்ல படமும் முடிந்துவிட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் காபியை பார்த்துவிட்டு பாலசந்தர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ‘எந்த தைரியத்துல இந்தப் படத்தை எடுக்க ஒப்புக்கொண்டாய்’ என கேட்டிருக்கிறார். ஏனெனில் ஒரு வேளை அந்த படம் மட்டும் ஃப்ளாப் ஆகியிருந்தால் சுரேஷ் கிருஷ்ணாவின் கெரியரே காலியாயிருக்கும். அதை வைத்தே இந்த கேள்வியை கேட்டிருக்கிறாய். இதற்கு சுரேஷ் கிருஷ்ணா ‘மேல ஒருத்தன் இருக்கிறான். அவனை நம்பித்தான் இறங்குனேன்’ என கடவுளை கூறினாராம்.