ரஜினிக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவானதே அந்த படத்திலிருந்து தானா?

X
ரஜினிக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவானதே அந்த படத்திலிருந்து தானா?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு உலகமெங்கும் மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது. இப்போது இவரது நடிப்பில் ‘ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தமிழை போல் தெலுங்கிலும் ரஜினிக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. ஆனால், அதெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே இல்லையாம். ரஜினியை வைத்து ‘பாட்ஷா, அண்ணாமலை, பாபா, வீரா’ ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் தான் சுரேஷ் கிருஷ்ணா.

சமீபத்தில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கொடுத்த ஒரு பேட்டியில் ரஜினியின் தெலுங்கு மார்க்கெட் குறித்து பேசுகையில் “என்னோட டைரக்ஷன்ல ‘அண்ணாமலை, வீரா’-வுக்கு அப்புறமா ரஜினி சார் பண்ண படம் தான் ‘பாட்ஷா’.

படத்தோட ஷூட் முடிஞ்சதும், ரஜினி சார் தெலுங்குல இதை நீங்க பண்ணுங்க ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சிரஞ்சீவி சார் கிட்ட சொன்னாரு. அவர் வேற ஒரு படத்தோட கமிட்மென்ட்னால பண்ண முடியலன்னு சொல்லிட்டாரு.

அதுக்கப்புறம் தான் படத்தை தெலுங்குல டப் பண்ணுனோம். படம் தமிழ்ல பெரிய ஹிட்டாச்சு. அதுவரைக்கும் ரஜினி சாரோட எந்த படமும் தெலுங்குல ஓடாது. அவருக்கு அப்போ தெலுங்கு மார்க்கெட்டே கிடையாது.

‘பாட்ஷா’-வோட தெலுங்கு டப்பிங்குமே ரொம்ப கம்மி விலைக்கு தான் கொடுத்தாங்க. ஆனா, அங்க அந்த படம் வேற லெவல் ஹிட்டாச்சு. அதுக்கப்புறம் தான் ரஜினி சாருக்கு தெலுங்கில் ஒரு பெரிய மார்க்கெட் உருவாச்சு. இப்போ அவரோட எல்லா படமுமே தெலுங்குல டப் ஆகி ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு காரணம் ‘பாட்ஷா’ தான்” என்று கூறியுள்ளார்.