எனக்கு இந்த படத்துல எதுமே பிடிக்கல....! சொல்லப்போய் தான் நடிச்சேன்... நெஞ்சுக்கு நீதி நடிகர் கூறிய ஷாக்கான தகவல்...

அருண்ராஜா காமராஜ் தயாரிப்பில் உதய நிதி நடிப்பில் உருவான படம் ‘ நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தில் உதய நிதி போலீஸாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தான்யா நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் சாதிபிரிவினை இன்னும் எப்படியெல்லாம் நம் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன , அதை எப்படி சமாளிப்பது, எந்த மாதிரியான உத்திகளை கையாளுவது போன்ற கோணங்களில் இயக்குனர் மக்களுக்கு புரிய வைத்துள்ளார். சாதியை கலைந்து சட்டம் தான் அனைவருக்கும் சமம் என்ற கதைகளமாக படத்தை உருவாக்கியிருப்பார்.
மேலும் இந்தப் படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி சாதிகளை மிகைப்படுத்தி பேசுவது மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கு பிடிக்கவில்லையாம். ஏனெனில் இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட வசனங்கள் எல்லாம் என் கருத்துக்களுக்கு முரண்பாடானது. மேலும் நான் கருப்புச் சட்டைக்காரன் என்று கூறினார்.
மேலும் படத்தில் உதய நிதி எந்த ஜாதியை சேர்ந்தவர் என்று அறிய ஒரு வசனம் இருக்கும். சார் நீங்கள் வெறும் விஜயராகவனா? பேருக்கு பின்னாடி எதும் இல்லையா என்று கேட்கவேண்டுமாம் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் இயக்குனரிடம் சுரேஷ் "சார் இதெல்லாம் நான் கேட்கனுமா?" என்று அடம்பிடித்தாராம். ஆனால் எனக்கு பிடிக்காமல் தான் இந்த கதாபாத்திரம் ஏற்று நடித்தேன். இயக்குனர் என்ன சொன்னாரோ அதன் படி தான் நடித்தேன் என்று கூறினார்.