எனக்குன்னு ஒரு பெரிய ரசிக கூட்டமே இருக்கு! - இதுதானா சூரியின் அடுத்தக்கட்ட ப்ளான்?
வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தற்சமயம் கதாநாயகனாக மாறியிருக்கிறார் நடிகர் சூரி.
சூரி தனிப்பட்ட வட்டார வழக்கு மொழியை கொண்டு பேசுவதே பலருக்கும் சூரியை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தமிழில் பல பெரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சூரி. இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடனும் சேர்ந்து நடித்துவிட்டார்.
வருகிற மார்ச் 31 அன்று இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் நடிகர் சூரியின் ரசிகர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
நடிகர் சூரிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா? என வாய் பிளக்கும் அளவிற்கு பெரும் ரசிக பட்டாளம் அவருக்கு இருக்கிறது. இதுக்குறித்து சூரி பேட்டியில் கூறும்போது “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எனக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து எனக்கு ரசிகர் மன்றம் திறக்க வேண்டும் என கேட்டு வந்தனர்.
அடுத்தக்கட்ட முடிவு:
பெரிய பெரிய ஹீரோக்கள் ரசிகர் மன்றம் வைத்து கொள்கின்றனர். ஆனால் ஒரு காமெடியனாக இருந்துக்கொண்டு எப்படி ரசிகர் மன்றம் துவங்க முடியும். எனவே அதுக்குறித்து யோசிக்கவில்லை. ஆனால் எனது ரசிகர்கள் தொடர்ந்து அனைவருக்கும் நல்லது செய்து வருகின்றனர்.
அவர்கள் ஆசைக்காகதான் அவர்களை விடுதலை இசை வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்தேன்” என சூரி கூறியுள்ளார். எனவே விடுதலை வெளியானவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சூரி ரசிகர் மன்றம் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என கூறப்படுகிறது.