நடிச்சா ஹீரோ தான்பா.! காமெடிக்கு கூப்பிடாதீங்க.!? சூரியை தேடும் அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்கள்.!

தமிழ் திரையுலகின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகராகவும், சிறு சிறு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை எனும் படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகர்களாகிய சந்தானம் மற்றும் யோகிபாபு அவர்களை போல நடிகர் சூரியும் தற்பொழுது கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

அடுத்ததாக மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான அமீர் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமீர் இயக்கத்தில் தற்போது ஆர்யா நடிக்கும் சந்தனதேவன் திரைப்படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த படம் முடிந்த பிறகோ அல்லது அதற்கிடையேயோ சூரி பட வேலைகள் நடக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் இயக்குனர் ராம் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, சூரி காமெடியன் அல்லாத முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

 

Related Articles

Next Story