Connect with us

இவர நம்பி எல்லா படமும் போச்சே!… தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் சூரி….

soori

Cinema News

இவர நம்பி எல்லா படமும் போச்சே!… தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் சூரி….

தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகராகவும், சிறு சிறு வேடங்களிலும் நடித்து வரும் நடிகர் சூரி தற்பொழுது கதாநாயகனாக களமிறங்க உள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என கவனிக்கத்தக்க சிறந்த திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் வெற்றிமாறன்.

இவர் இயக்கும் திரைப்படங்கள் விருதுகளை குவிக்கும். அசுரன் படத்திற்கு தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.  தற்போது சூரி – விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சூரி முற்றிலும் தனது முகபாவனை மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது, தனது தாடி முழுவதையும் வழித்து கொண்டு முறுக்கு மீசையில் போலீஸ் கெட்டப்பில் தோன்றுகிறார். இந்த படம் கொரோனா காரணமாக நிலுவையில் உள்ளதால் இந்த படத்திலிருந்து மற்ற படங்களுக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

 

 

அதாவது, இந்த படத்தில் தனது தாடியை முற்றிலும் வழித்ததால் வேற படத்திற்கு காமெடி கதைக்காக செல்லும்பொழுது இயக்குனர்கள் இந்த முக பாவனை எடுக்காது என்று கூறுகிறார்களாம். தாடி இருந்தால்தான் பழைய தோற்றம் காமெடிக்கு சரியாக வரும் என்று கூறுவதால் சூரி தற்போது சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லங்க இந்த காரணத்தினால் 15 படத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- சமந்தா முன்னாள் கணவரின் புதிய ஜோடி அந்த நடிகையா?! லீக் ஆன தகவல்.!

மேலும் கொரோனா காரணமாக வெற்றிமாறன் தனது விடுதலை படத்தை இயக்குவதற்கு மிகவும் பயந்து இருக்கிறார். ஆனால், விரைவில் படப்பிடிப்பு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top