ரெட்ரோ படத்தில் இருக்கும் சவால்.. ‘கங்குவா’வை சாகடிச்சவன் தயாரா இருங்க

by Rohini |   ( Updated:2025-04-24 09:12:09  )
retro
X

retro

Retro: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வர இருக்கும் திரைப்படம் ரெட்ரோ படம் .மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் படத்தைப் பற்றி எந்த ஒரு ப்ரோமோஷன் பெரிய அளவில் பண்ணாமல் இருக்கிறார்கள். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பெரிய அளவில் செய்தார்கள். அந்த ஒரு திருப்தியில் படக்குழு இருப்பார்கள். அதற்குப் பிறகு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. எப்படியும் கேரளா கர்நாடகா என ஒரு ரவுண்டு அடிப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

சூர்யாவும் பூஜா ஹெக்டேவும் இணைந்து பேசும் பொழுது அந்தப் படத்திற்கான ஹைப் இன்னும் அதிகமாக கிடைக்கும். அண்மைக்காலமாக ஒரு படத்தைப் பற்றி படக்குழுவை சேர்ந்த பலரும் பேட்டிகளில் தாராளமாக கொடுத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த படத்தை பற்றி சூர்யாவும் பூஜாவும் இணைந்து பேசுவார்கள் என எதிர்பார்க்கலாம். படத்தின் டிரைலரை பார்த்து நிறைய பேர் சொன்னது இது ஒரு பயங்கரமான ஆக்சன் திரைப்படம் என்று சொன்னார்கள். ஆனால் கார்த்திக் சுப்பராஜ் பேட்டியில் கூறும் பொழுது இது ஒரு லவ் ஆக்சன் திரைப்படம் என்று கூறினார்.

ஆனால் அவர் சொன்னதையும் மீறி எல்லாமே கதை திரைக்கதை படத்தில் வரும் சீன் இதை பொறுத்து தான் அமையும். ஒரே வார்த்தையில் அந்த படத்தை நாம் முடிவுக்கு கொண்டுவர முடியாது . கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் தான் என்று நினைத்து விடுவார்கள். ஆனால் அப்படியான படம் இது கிடையாது என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார். அதையும் தாண்டி படத்தில் என்ன மாதிரியான சீன் வைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் பொழுது தான் நமக்கு தெரிய வரும் .உதாரணத்திற்கு சண்டக்கோழி படத்தில் இவன்தான் வில்லன் என்று தெரிய வரும் பொழுது யாரும் எதிர்பார்க்காமல் விஷால் கீழே இறங்கி ஓடுவார்.

ஆனால் அவர் பயந்துட்டு தான் ஓடுகிறார் என்று நினைக்கும் பொழுது அவர் முன்னாடி வழியாக வந்து அவரை அடிப்பார். அதுதான் சீன். அதனால் அந்த மாதிரி ஒன்று அல்லது இரண்டு சீன் படத்தில் அமைந்தாலே அதுவே படத்தை இழுத்துக் கொண்டு போய்விடும். படம் முழுக்க என்ன வைத்திருக்கிறார் என்பது நமக்கு தெரியாது. எல்லாவற்றையும் தாண்டி சூர்யாவுக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப முக்கியமான படம். அண்மை காலமாக சூர்யாவின் படம் பெருசாக ஓடவில்லை. கடைசியாக வந்த கங்குவா படம் சூர்யாவுக்கும் சரி அவருடைய ரசிகர்களுக்கும் சரி மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இன்னொரு சவாலும் இந்த படத்தில் இருக்கிறது. கங்குவா படம் வெளிவரும் பொழுதே படத்தின் கதை பிரசன்டேஷன் நல்லா இல்லை என அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. இந்த படத்தை பிஜேபி தான் ஒழித்தது, சூர்யாவுக்கு எதிராக ஒரு அரசியல் இங்கு நடக்கிறது ,சூர்யா சொன்ன சில கருத்துக்களுக்கு எதிராக சூர்யாவை முடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு கும்பல் இந்த படத்துக்கு எதிராக இறங்கி வேலை செய்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் ரெட்ரோ திரைப்படம் நன்றாக ஓடிவிட்டால் சொன்னவர்கள் எல்லாம் முகத்தை எங்கு வைப்பார்கள் என தெரியவில்லை. அதுக்காகவே இந்த படம் ஓட வேண்டும் என அந்தணன் கூறி இருக்கிறார்.

Next Story