Connect with us

சூர்யாவை ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!…வெளியான சூர்யா 42 மோஷன் போஸ்டர் வீடியோ…

suriya

Cinema News

சூர்யாவை ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!…வெளியான சூர்யா 42 மோஷன் போஸ்டர் வீடியோ…

அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிவா அடுத்து சூர்யா வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இது சூர்யாவின் 42வது திரைப்படமாகும். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்.

ரஜினியை வைத்து அண்ணாத்த இயக்கிய பின் சிவா படத்தை இயக்கி வருகிறார். அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில், சூர்யா படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்கிற உறுதியில் சிவா இருக்கிறார்.

suriya

இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது சூர்யாவுக்கு இப்படம் வித்தியாசமாக இருக்கும் என எண்ண தோன்றுகிறது. அனேகமாக இப்படம் ஒரு சரித்திர திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மோஷன் போஸ்டர் வீடியோ சூர்யா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகமெங்கும் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top