மங்களகரமா மாசாணியம்மன் கோவில்ல ஆரம்பிப்போம்!.. சூர்யா 45 படத்தின் பூஜை!.. டைட்டில் இதுவா?!..

by ramya suresh |
suriya45
X

suriya45

சூர்யா 45 படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் தொடங்கி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. பெரும் பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது.

இதையும் படிங்க: பயத்தில் அழுத ரோகிணி… ராதிகாவை வசைப்பாடிய கோபி… அப்பத்தாவின் சந்தோஷம்

ஆனால் படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை சந்தித்து ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று படக்குழுவினர் நம்பி இருந்த நிலையில் வசூல் ரீதியாகவும் இப்படம் தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் கங்குவா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

தனது கேரியரில் கங்குவா படம் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவருக்கும் இது ஏமாற்றம்தான். அடுத்ததாக நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

suriya45

suriya45

சூர்யா 45 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார். மேலும் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

இப்படம் தொடர்பான அறிவிப்பு கடந்து சில தினங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் இந்த திரைப்படம் ஒரு பேண்டஸி டிவோஷனல் படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் துவங்கி இருக்கின்றது.

இதையும் படிங்க: இளையராஜா மட்டும்தான் இருக்காரா!.. அப்ப வண்டியை ஓரமா விடுங்க?!.. நடிகர் சூரி பகிர்ந்த சுவாரஸ்யம்!..

இந்த பூஜைக்கு நடிகர் சூர்யா மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் கலந்து கொண்ட வீடியோக்கள் இணையதள பக்கங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒருவேளை படத்திற்கும் மாசாணி அம்மன் என்கின்ற டைட்டில் தான் வைக்கப் போகிறாரா ஆர்.ஜே பாலாஜி என்று கூறி வருகிறார்கள்.

Next Story