Kanguva: கங்குவா படத்தால் சூர்யா 45-க்கு வந்த பிரச்சனை!.. இதுதான் காரணமா?...
Kanguva: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பீரியட் படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது,
நடிகர் சூர்யா இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களையும் மொத்தமாக சிறுத்தை சிவா இயக்கி முடித்து விட்டதாக கூறப்படுகின்றது. கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டப் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: என்னது…! தளபதி 69 விஜயின் கடைசி படம் இல்லையா…? ப்ளூ சட்டை மாறனின் புதிய உருட்டு…!
படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா பல்வேறு இடங்களுக்கு சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். இன்று சென்னையில் பட வெளியீட்டுக்கு முன்பு நடைபெறும் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு படம் குறித்து பேசி இருந்தார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: கங்குவா படத்துக்காக சம்பவம் செய்த சூர்யா..! மிரண்டு போன நட்டி என்ன சொல்றார் பாருங்க..!
அதற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். சூர்யா 45 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கங்குவா திரைப்படம் காரணமாக சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.
அதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் அந்த கெட்டப் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். தற்போது நடிகர் சூர்யா கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் காரணத்தால் இந்த மாதம் தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட இருந்த படப்பிடிப்பு தற்போது நவம்பர் 20 தேதிக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.