உங்களுக்கு தரணும்னு ஆசையா தான் இருக்கு ஆனா தர மாட்டேன்.! அடம்பிடிக்கும் சூர்யா.!
நடிகர் சூர்யாவுக்கு தமிழை போல, தெலுங்கு திரையுலகிலும் நல்ல மார்க்கெட் நிலவரம் இருக்கிறது. அவருடைய சமீபகால திரைப்படங்களாக சிங்கம் 3, 24 போன்ற திரைப்படங்கள் தமிழில் சரியாக ஓடாவிட்டாலும், தெலுங்கில் ஹிட்டடித்து விடுகின்றன.
அதானல் தான் 24 படத்தை தெலுங்கு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி இருந்தார். அந்த படம் தமிழில் சரியாக போகவில்லை. ஆனால் தெலுங்கில் சூப்பர் ஹிட். அந்த படம் ரிலீசுக்கு முன்பே இரண்டாம் பாகம் ரெடியாகும் என கூறப்பட்டதாம்.
பிறகு தமிழில் வந்த வரவேற்பை கண்டு சூர்யா அந்த முடிவை மறுபரிசீலனையில் வைத்திருந்தார். ஆனால், தற்போது 24 பார்ட் 2வுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். சூர்யாவும் கதையை ஓகே செய்ததாக தெரிகிறது.
இதையும் படியுங்களேன் - கொஞ்சம் தாமதமாகி இருந்தால் 60 வயது பாட்டி அதோ கதிதான்.! சூர்யா படத்தின் தியேட்டர் சம்பவம்.!
தற்போதைய நிலவரபடி, சூர்யாவே நினைத்தாலும் 24 இரண்டாம் பாகத்தில் நடிப்பது கடினம் என்கிறது திரையுலகம். ஆம் தற்போது பாலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு வேலைகள் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பட வேலைகள் இருக்கிறது. அதனை முடித்து விட்டு, சிறுத்தை சிவா படம் இருக்கிறது. இவையெல்லாம் முடித்தால் தான் 24 பட இரண்டாம் பாகம் பற்றி சிந்திக்க முடியும் சூர்யா என்கிறது திரையுலகம். ஆதலால் விக்ரம் குமார் இயக்குனர் அடுத்தடுத்து படங்களை முடித்துவிட்டு சூர்யாவுக்காக காத்திருந்தால் படம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.