Connect with us

Cinema News

ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மிஞ்சும் சூர்யா… அடுத்து வரப்போகும் மெகா வில்லன் இவர் தான்…

அண்மையில் வெளியான சூர்யா திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிக பெயரை சம்பாதித்து கொடுத்தது என்றால் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வரும் அந்த சிறு கௌரவத் தோற்றம் தான். ரோலக்ஸ் கதாபாத்திரமாகவே சூர்யா வாழ்ந்து இருப்பார்.

விக்ரம் படத்தில் படம் முழுக்க வந்த நடிகர்களை காட்டிலும் சில நிமிடம் வந்த சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். அப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தை அவர் நடித்தது இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால், சில வருடங்களுக்கு முன்பு விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வருடங்களில் நடித்த திரைப்படம் 24. அதில் ஆத்ரேயா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் ரோலக்ஸ் சூர்யாவையே மிஞ்சி இருப்பார் சூர்யா.

இதையும் படியுங்களேன் – விஜய் நடிக்க மறுத்து தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. ச்ச தளபதி நடித்திருந்தால் வேற லெவல்….

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் வேலையில் விக்ரம் குமார் ஈடுபட்டு உள்ளாராம். இதற்கான கதையை சூர்யாவிடம் அவர் கூறியுள்ளாராம். அதன் பிறகு இந்த படத்தின் கதையை விரிவாக்கி வருகிறாராம் இயக்குனர்.

சூர்யாவுக்கு இருக்கும் பட வரிசையில் தற்போது 24 படத்தின் இரண்டாம் பாகமும் லிஸ்டில் சேர்ந்துள்ளது. முக்கியமாக ஆத்ரேயா கதாபாத்திரம் இதில் படம் முழுக்க வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top