பைக் கம்பெனியுடன் போட்ட ஒப்பந்தத்தால் சூர்யா படத்துக்கு வந்த சிக்கல்… ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்…
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சில்லுன்னு ஒரு காதல்”. இத்திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற “முன்பே வா என் அன்பே வா” என்ற பாடல் பலர் மனதையும் கொள்ளைக்கொண்ட பாடலாக இப்போதும் திகழ்ந்து வருகிறது.
“சில்லுன்னு ஒரு காதல்” திரைப்படம் இளைஞர்களை மிகவும் வசீகரித்த திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக அதில் இடம்பெற்ற சூர்யாவுக்கும் பூமிகாவுக்கும் இடையேயான ஃபிளாஸ் பேக் காதல் காட்சிகள் மிகவும் அழகாகவும் ரசனையாகவும் படமாக்கப்பட்டிருந்தது.
சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றித்திரைப்படமாக “சில்லுன்னு ஒரு காதல்” அமைந்தது. மேலும் ரசிகர்களிடையே ஒரு ஃபீல் குட் திரைப்படமாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தின் ஃபிளாஸ் பேக்கில் சூர்யா கல்லூரியில் படிப்பது போல் பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகள் அவை. அந்த காட்சிகளில் சூர்யா பயன்படுத்திய டிவிஎஸ் நிறுவனத்தின் பைக் அப்போது மிகவும் பிரபலமாக ஆனது.
எனினும் “சில்லுன்னு ஒரு காதல்” திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது யமாஹா நிறுவனத்தின் ஆர் எக்ஸ் 100 வாகனத்தைத்தான் சூர்யா பயன்படுத்துவது போன்று திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அந்த காலகட்டத்தில் டிவிஎஸ் நிறுவனத்தோடு சூர்யா பல விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தார்.
இதையும் படிங்க: “இதெல்லாம் ஒரு படமா??” தனுஷை கரித்துக்கொட்டிய சரண்யா… ஆனால் டப்பிங்கில் என்ன ஆச்சு தெரியுமா??
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி வாகனத்தின் பல விளம்பரங்களில் சூர்யா அந்த காலத்தில் நடித்து வந்தார். ஆதலால் அந்த காலகட்டத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் பைக்குகளை தவிர வேறு நிறுவனத்தின் பைக்குகளை பயன்படுத்துவது போல் சூர்யா நடிக்கக்கூடாது என அந்நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாம்.
ஆதலால்தான் “சில்லுன்னு ஒரு காதல்” திரைப்படத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் பைக்கை சூர்யா பயன்படுத்தும்படி நிர்பந்தத்திற்குள்ளானாராம். ஆனால் அத்திரைப்படத்தின் தாக்கத்தால் அப்போது பல இளைஞர்கள் அந்த நிறுவனத்தின் பைக்குகளை வாங்கினார்களாம். இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் வணிகத்தில் நல்ல லாபத்தை பார்த்தார்களாம்.