திருந்தாத பாலா.! சூர்யாவின் மாஸ்டர் பிளான்.! ஸ்கெட்ச் போட்டு தூக்க போகிறாராம்.!

by Manikandan |
திருந்தாத பாலா.! சூர்யாவின் மாஸ்டர் பிளான்.! ஸ்கெட்ச் போட்டு தூக்க போகிறாராம்.!
X

இயக்குனர் பாலா தற்போது மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுத்து, தன்னை ஒரு வெற்றிப்பட இயக்குனராக மாற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். அதற்காக தற்போது சூர்யாவிடம் கதை கூறி அதனை படமாக்கி வருகிறார். இது சூர்யாவின் 41வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சூர்யா மீனவராக நடிக்கிறாராம்.

இதனை கேள்விப்பட்ட சினிமா விமர்சகர்கள் இயக்குனர் பாலா பழைய மாதிரி இல்லை. அவர் தற்போது மிகவும் அன்பாக நடந்து கொள்கிறார் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, இயக்குனர் பாலா மாறவே இல்லையாம். மீண்டும் அதே பாணியில்தான் படமாக்கி வருகிறாராம்.

இந்த படத்திற்கு தயாரிப்பாளரும் சூர்யா தான். இயக்குனர் பாலா தான் நந்தா என்னும் படத்தின் மூலம் சூர்யாவை ஓர் நல்ல நடிகனாக மாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் காரணமாக தயாரிப்பாளர் சூர்யா இயக்குனர் பாலாவிடம் சில விஷயங்களையும் வெளிப்படையாக கேட்க முடியாது.

அதன் காரணமாக சூர்யா தற்போது புதுவிதமான ஒரு ஐடியாவை கையாண்டுள்ளாராம். ஆம் நாம் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா அவர்களை இப்படத்தில் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக மாற்றிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் - ரஜினியை அடிக்கனும் நீங்க வாங்க.! தெறித்து ஓடிய பிரபல நடிகர்.! சுவாரஸ்ய பின்னணி.!

சுதா கொங்கரா ஏற்கனவே பரதேசி படத்தில் பாலாவுடன் வேலை செய்துள்ளார். அதன் காரணமாக தற்போது சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பதற்கு சுதா நியமிக்கப்பட்டுள்ளாராம். இதன்மூலம் தயாரிப்பாளர் சூர்யா இயக்குனர் பாலாவிடம் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் இயக்குனர் சுதா மூலம் கேட்டு கொள்ளலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம்.

மற்றபடி சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா நடிகர் சூர்யாவாக மட்டுமே நடந்து கொள்வாராம். இதன்மூலம் பாலாவுக்கும் இவருக்கும் இடையில் எந்தவித மனஸ்தாபமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. பார்க்கலாம் அடுத்தடுத்து படத்தின் அப்டேட் என்னென்ன வருகிறது என்று.

Next Story