Connect with us

சூர்யாவையும் ‘அந்த’ ஹீரோயினையும் பிரிக்க பக்கா பிளான்.! ஒரு வேளை ஜோதிகா சொல்லிருப்பாங்களோ?!

Cinema News

சூர்யாவையும் ‘அந்த’ ஹீரோயினையும் பிரிக்க பக்கா பிளான்.! ஒரு வேளை ஜோதிகா சொல்லிருப்பாங்களோ?!

சூர்யா சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவே தயாரித்தும் வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மீனவர்கள் பிரச்னையை பற்றி இயக்குனர் பாலா கதைக்களம் அமைத்து உள்ளாராம். கன்னியாகுமரியில் இப்பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம். இதே போல கோவா, மதுரை என பல்வேறு இடங்களில் இப்பட ஷூட்டிங் நடைபெற உள்ளதாம்.

தற்போது இப்பட ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் நிலையில் சூர்யாவுக்கு கன்னியாகுமரியில் ஒரு ரிசார்ட்டில் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாம். ஆனால், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டிக்கு ரூம் அங்கிருந்து 15 கிமீ அப்பால் நகர்கோவிலில் தான் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – ஹாலிவுட்டுக்கு சவால் விடும் கேஜிஎப்-3…சம்பவம் செய்ய போகும் பிரசாந்த் நீல் டீம்…

இதனை அறிந்த கோடம்பாக்கத்தினர், ஏன் இவ்வளவு இடைவெளி, சூர்யா இருக்கும் இடத்திற்கு அருகிலேயே தங்க வைக்கலாமே அப்போது தானே ஷூட்டிங் கிளம்பி விரைவாக ஸ்பாட்டுக்கு வர சரியாக இருக்கும். அதனை விடுத்து இவ்வளவு தூரம் ஏன் என கேட்டு வருகின்றனர். ஒருவேளை படத்தில் இன்னோர் ஹீரோயினாக நடிக்கும் சூர்யா மனைவி ஜோதிகா இப்படி பிளான் போட்டுட்டாங்க போல என காமெடியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

எது எப்படியோ எதோ ஒரு நிர்வாக காரணத்திற்காக, ஹீரோயின் ரூம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும். அல்லது அங்கு ரூம் கிடைக்காமல் கூட இப்படி தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என உண்மை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top