சென்னைக்கு நோ!.. மும்பைக்கு வா!.. சூர்யாவை சுற்றவிடுகிறாரா ஜோதிகா?.. வட இந்திய கோயில் விசிட்!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வருகிற மே மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்றைக்கு முன் தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சூர்யாவின் தந்தை சிவகுமார், அம்மா, தங்கை, தம்பி கார்த்தியின் மகள் ஆகியோரும் கலந்துக்கொண்டிருக்கும் போது ஜோதிகா பங்கேற்காமல் இருந்தது விமர்சகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழும்பியது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா இருவரும் சேர்ந்து அசாமில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதை பகிர்ந்துள்ளார் ஜோதிகா.

2டி எண்டர்டைன்மண்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் அடுத்த மாதம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதுவரை அவர் இசையில் வெளியான மூன்று பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் மூத்த நடிகரான சிவகுமார் தனது மகனை பற்றி மிக பெருமையாக பேசியிருந்தார். அவர் பேசியதில் சில சர்சைகளும் எழுந்தன. சூர்யாவின் குடும்பத்தில் அனைவரும் விழாவிற்கு வந்திருக்கும் போது ஜோதிகா மட்டும் வராமல் போனது பல கேள்விகள் எழ காரணமாக அமைந்தது.

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஜோதிகா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் அசாமில் உள்ள கோவிலில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கோலாப்பூர் மகாலட்சுமி மற்றும் காமாக்யாவின் தரிசனம் புத்தாண்டன்று கிடைத்தது பாக்கியம். மேலும், அவர் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாகவும், ரசிகர்களின் அன்பிற்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி என கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ஜோதிகாவுக்கு சென்னைக்கு வரமுடியாதோ என்றும் சூர்யா தான் மும்பைக்கு சென்று தனது மனைவியை பார்த்து வருகிறாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.