Cinema History
சிவகுமார் ஏன் இப்போ நடிக்கல?.. எல்லாத்துக்கும் சூர்யா, கார்த்தி செஞ்ச வேலை தான் காரணமா?..
தமிழ் சினிமாவில் 72 வயதில் நடிகர் ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குநர் பாரதிராஜா 80 வயதை கடந்த நிலையிலும் இன்னமும் குணசித்ர வேடங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.
80 வயதை கடந்த நிலையில், மீண்டும் கவுண்டமணி ஹீரோவாக ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்து வருகிறார். ஆனால், நடிகர் சிவகுமார் ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்கிற கேள்விக்கு அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி தான் காரணம் என ஷாக்கிங் பதில் வந்துள்ளது.
சிவகுமார் எனும் சிறந்த நடிகர்:
ஓவியக் கலைஞனாக தனது பயணத்தை தொடங்கிய சிவகுமார் 1965ம் ஆண்டு ஏ.சி. திரிலோகசந்தர் இயக்கத்தில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பழனிச்சாமியாக சினிமாவுக்குள் நுழைந்தவரை சிவக்குமார் என முதல் படத்திலேயே பெயரை மாற்றியது எஸ்.எஸ். ராஜேந்திரன் தான்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் என அனைத்து சக நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்கு சொந்தக்காரரான சிவகுமார் ஏகப்பட்ட படங்களில் முருகனாக வேஷம் போட்டு தமிழ் சினிமா ரசிகர்களை பக்தி மார்க்கத்திற்கே கொண்டு சென்றவர் என்றாலும் அது மிகையாகாது.
190 படங்கள்:
சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, கண் கண்ட தெய்வம், பணமா பாசமா, திருமாள் பெருமை, திருமலை தென்குமரி, நவகிரகம், அகத்தியர், தெய்வம், அரங்கேற்றம், பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன், அன்னக்கிளி, பத்ரகாளி, சிட்டுக்குருவி, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி என ஏகப்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருந்தார் சிவகுமார்.
ஹீரோ, துணை கதாபாத்திரம், அப்பா வேடம் என பல வேடங்களில் நடித்து சுமார் 190 படங்களில் நடித்துள்ளார் சிவகுமார். இளம் நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அஜித் படம் தான் கடைசி:
நடிகர் விஜய்யின் தேவா, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சிவகுமார் சியானாக விக்ரம் மாறிய சேது படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு இருப்பார். சூர்யாவின் உயிரிலே கலந்தது படத்திற்கு பிறகு கடைசியாக 2001ம் ஆண்டு வெளியான அஜித், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்ததன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
சின்னத்திரை தொடர்களிலும் நடித்து ஹிட் கொடுத்து வந்த சிவகுமார் கடைசியாக 2008ம் ஆண்டு முடிந்த லக்ஷ்மி சீரியலுடன் ஒட்டுமொத்தமாகவே நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார்.
சூர்யா, கார்த்தி தான் காரணம்:
சினிமாவை விட சொற்பொழிவு ஆற்றுவதில் சிவகுமாருக்கு எழுந்த ஆர்வம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து ஒதுக்கி மேடை பேச்சுகள் பக்கம் நகர்த்தியது.
மேலும், சூர்யாவை தொடர்ந்து 2010ம் ஆண்டு இளைய மகன் கார்த்தியும் பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நிலையில், இனி மகன்கள் நடிக்கட்டும், நாம நமக்கு பிடித்ததை பார்ப்போம் என விலகி விட்டாராம் சிவகுமார் எனக் கூறுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு ஒரு சிங்கத்தையும் சிறுத்தையையும் கொடுத்துள்ளதே சிவகுமார் செய்த சிறப்பான விஷயம் என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த ஏரியா ஓப்பனா இருக்கு!.. ரேஷ்மாவை ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ…