ஜாலியாக சுற்றித்திரியும் தம்பி கார்த்தி... அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அண்ணன் சூர்யா...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, குக்கூ இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, அடுத்ததாக தொடர்ந்து பல பெரிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவரது நடிப்பில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ள நிலையில், கார்த்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இதையும் படியுங்களேன்- ரசிகர்களை கடுப்பேற்றிய வாடிவாசல் படக்குழு.. பயந்து ஒதுங்கும் சூர்யா.. ஆனால் இது அது அல்ல….
அந்த பக்கம் பார்த்தால் அவருடைய அண்ணன் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்திலே இருக்கிறார். ஏனென்றால், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் வேலை செய்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாமதமாவதால், அவர் விலகிவிட்டார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு என கூறினாலும், அது இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் அவரும் ஒளிப்பதிவு செய்வாரா என தெரியவில்லை.
சூர்யாவும் என்ன செய்வது என்று, தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். அவருடைய தம்பி கார்த்தி அடுத்தது படங்களில் நடித்து வரும் நிலையில், சூர்யா வாடிவாசல் படத்திலும் இணையாமல், வனகங்கான் படத்திலும் இணையாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.