அண்ணனும் தம்பியும் சேர்ந்து அமேசான் பிரைமை காலி பண்ணிட்டாங்களே!.. ஐயோ பாவம்….

Published on: January 21, 2026
suriya karthi
---Advertisement---

திரையுலகில் OTT என்பது தற்போது முக்கிய வியாபாரமாக மாறியிருக்கிறது. தியேட்டரில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் 3 வாரங்கள் கழித்து Netflix, Amazon Prime போன்ற OTT தளங்களில் ஒளிபரப்பு செய்கிறார்கள். எனவே புதிய படங்களை பல கோடிகள் கொடுத்து ஓடிடி நிறுவனங்கள் வாங்குகின்றன. அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

ஓடிடி மூலம் பல கோடி வருமானம் வருவதால் அந்த நிறுவனங்கள் சொல்லும் தேதியில்தான் தயாரிப்பாளர்கள் படத்தையே ரிலீஸ் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி.. ஒரு படம் ஓடிடியில் போனி ஆகவில்லை என்றால் ரிலீஸ் தேதியையே தயாரிப்பாளர்கள் தள்ளிப்போடுகிறார்கள். சூர்யாவின் கருப்பு திரைப்படம் கூட அதனால்தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கின. ஆனால், பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது ஓடிடி நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டன. எவ்வளவு பேர் படங்கள் பார்க்கிறார்களோ அதில் வரும் லாபத்தில் தயாரிப்பாளருக்கு பங்கு என வியாபாரத்தை மாற்றி கொண்டார்கள். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர் என்றால் மட்டுமே முன் தொகையாக சில கோடிகளை கொடுக்கிறார்கள்.

இந்நிலையில்தான் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தி இருவரின் படங்கள் சேர்ந்து அமேசான் பிரைம் நிறுவனத்தை காலி செய்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 81 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால் இந்த படம் தியேட்டரிலேயே ஓடவில்லை என்பதால் ஓடிடியிலும் யாரும் சீண்டவில்லை. ஓடிடி மூலம் அமேசான் நிறுவனத்திற்கு ஒரு கோடி மட்டுமே வருமானம் வந்திருக்கிறது. 80 கோடி நஷ்டம்..

அதேபோல் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து பொங்கலுக்கு வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வாங்கிய விதத்திலும் அமேசான் பிரைம் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்திருக்கிறது. இதையடுத்து இனிமேல் அதிக விலை கொடுத்து படங்களை வாங்க வேண்டாம்.. மெலும், நெட்பிளிக்ஸ் போல சொந்தமாக வெப் சீரியஸ்களை தயாரித்து ஒளிபரப்பலாம். நேரடியாக ஓடிடியில் ப்ரீமியர் ரிலீஸ் செய்ய முன்வரும் படங்களை மட்டுமே வாங்குவோம் என்கிற முடிவை அமேசான் நிறுவனம் எடுத்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.