சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி காஷ்மோரா கெட்டபில் வில்லனாக வருவாரா என்கிற கேள்வியை தொகுப்பாளினி அர்ச்சனா சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்த்தி மற்றும் சிறுத்தை சிவா முன்னிலையில் வைத்தார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி அதற்கு வாய்ப்பே இல்லை படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார். கங்குவா இரண்டாம் பாகத்தில் சூர்யா மற்றும் கார்த்தி நேருக்கு நேர் மோதுவார்களா? அதற்கு வாய்ப்பு இருக்குமா? என்கிற கேள்வியை மீண்டும் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சிறுத்தை சிவா வாய்ப்பு இருக்கலாம்.. நடக்கலாம் என பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாரா என்ன காட்டுறது!.. நான் நல்லா காட்டுறேன் பாருங்க!.. அதே விழாவில் மிரட்டிய பிரபல நடிகை!..
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் என அனைத்தும் முடிந்த நிலையிலும், இன்னமும் அந்த படத்தின் சிஜி பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாக சமீபத்தில் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகின. சூர்யாவின் கங்குவா 350 கோடி பட்ஜெட்டில் உருவானால் பிரேக் ஈவனே 500 கோடி தாண்ட வேண்டுமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அப்படி மட்டும் நடந்தால் சூர்யா பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் மிகப்பெரிய ரெக்கார்டை படைப்பார் என்கின்றனர்.
இதையும் படிங்க: ரெண்டு படத்துல வாய்ப்பு போச்சி!.. வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கலாம் விஜய் சேதுபதி!…
சூர்யா தயாரிப்பில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூரரைப் போற்று இந்தி திரைப்படம் ரெடியாகி உள்ள நிலையில், அந்த படமும் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. வாடிவாசல் படத்தை ஆரம்பிக்காமல் கங்குவா படத்தை ஆரம்பித்து முடித்த சூர்யா தற்போது புறநானூறு மற்றும் வாடிவாசல் படத்தை நிறுத்தி விட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து நடித்து வருகிறார்.
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…