ரெட்ரோ ஃப்ளாப்ன்னு யாரு சொன்னா?.. கட் அண்ட் ரைட்டா கலெக்ஷனை போட்ட 2டி நிறுவனம்!.. பெத்த லாபமாம்!..

#image_title
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடந்த மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அள்ளி இருப்பதாக 2டி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூர்யா நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி வருவதாக பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டு 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான கங்குவா திரைப்படம் 150 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியாமல் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் அந்தமானில் அடிமைகளாக வாழும் மக்கள் சிரிப்பையே மறந்து கஷ்டப்பட்டு வருவதாகவும், அவர்களை காக்கும் குலசாமியாக சூர்யா ஜடாமுனியாக மாறி அங்கே அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாசர் மற்றும் விதுவிடம் இருந்து மீட்பதும் தனது வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜின் தங்க மீன்களை அரசிடம் ஒப்படைப்பதுமாக கதை உருவாகியிருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை சூப்பராக காட்டியுள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், திரைக்கதையில் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார் என விமர்சனங்களும் கடுமையாக இருந்தன. ஆனால், ரெட்ரோ திரைப்படம் தோல்வியை சந்திக்கவில்லை என்றும் இதுவரை உலக அளவில் 104 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றுள்ளதாக சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் ரெட்ரோ திரைப்படம் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் வசூலையாவது கடக்குமா என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.