ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மிஞ்சும் சூர்யா!...இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!...

by Manikandan |   ( Updated:2022-08-09 08:17:20  )
ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மிஞ்சும் சூர்யா!...இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!...
X

நடிகர் சூர்யா ஹீரோ கதாபாத்திரங்கள் மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களும் நடித்து கலக்கி வருகிறார். குறிப்பாக கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படத்தில் சூர்யா 5 நிமிடம் வந்தால் கூட, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் விதமாக தனது எதார்த்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

படத்தில் இவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம், சூர்யா தற்போது வணங்கான் படத்தில் நடித்து வரும் நிலையில், புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்- இனி உச்ச நட்சத்திரங்கள் சம்பளம் திண்டாட்டம் தான்.. சீக்ரெட்ஸ் சொல்லும் சினிமா பிரபலம்.!

அது என்னவென்றால், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் "RC15" படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் ரோலக்ஸை மிஞ்சும் அளவிற்கு ஒரு கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

வெளிய தெரியவேண்டாம், படம் பார்க்கும் போது, ரசிகர்களுக்கு சூர்யா வருவது சஸ்பன்ஸாக வைத்திருக்கலாம் என ஷங்கர் திட்டம்போட்டுள்ளாராம். மேலும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்துள்ளார். எனவே, இதன் மூலம் ஷங்கருக்கும், சூர்யாவிற்கும் நல்ல நட்பு உருவாகியுள்ளது. இதனால் "RC15" படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்க படுகிறது.

Next Story