சூர்யா 45 திரைப்படத்தில் சூர்யா இந்த ரோலில் நடிக்கிறாரா?.. அட நம்ம திரிஷாவுமா?..
சூர்யா 45 திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் சூர்யா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. தனக்கென வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் மெனக்கெட்டு நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: இதக்கூடவா அஜித் சரியா கேட்க மாட்டாரு?.. அந்தப் படமும் திருட்டு கதையா?.. பொங்கிய பிஸ்மி..
கங்குவா சொதப்பல்:
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா எந்த திரைப்படத்திலும் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க கங்குவா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். இதற்காக பாலாவின் வணங்கான் மற்றும் சுதா கொங்கராவின் புறநானூறு ஆகிய 2 திரைப்படங்களில் இருந்தும் விலகினார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த காரணத்தால் படுதோல்வியை சந்தித்தது. சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய காரணத்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இது சூர்யாவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது. இருப்பினும் நடிகர் சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நம்பிக்கையுடன் நடித்து வருகின்றார்.
சூர்யாவின் லைன் அப்:
கங்குவார் திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திரைப்படமாவது நடிகர் சூர்யாவுக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூரில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆர் ஜே பாலாஜி திரைப்படத்தில் நடிகை திரிஷா 20 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கின்றார். மேலும் ஏ ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். 20 வருடம் கழித்து சூர்யாவும் திரிஷாவும் இந்த திரைப்படத்தில் இணைய இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் இப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
இதையும் படிங்க: Vijay: அப்ப மட்டும் இனிச்சிது… இப்போ என்ன? விஜயின் அரசியல் சிக்கல்தான்.. பொளக்கும் பிரபலம்
வக்கீலாக சூர்யா-த்ரிஷா:
சூர்யா 45 திரைப்படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக வக்கீல் கதாபாத்திரத்தில் ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். தற்போது மீண்டும் சூர்யா 45 படத்தில் அவர் வக்கீலாக நடிக்கின்றார் என்கின்ற தகவல் வெளிவந்துள்ளது.
சூர்யாவை போல த்ரிஷாவும் இப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் சூர்யாவுக்கு இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தால் போதும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது.