Connect with us

அடேங்கப்பா.! விஜயகாந்தும், சூர்யாவும் இணைந்து இத்தனை படங்கள் நடித்துள்ளனரா.?! லிஸ்ட் இதோ..,

Cinema News

அடேங்கப்பா.! விஜயகாந்தும், சூர்யாவும் இணைந்து இத்தனை படங்கள் நடித்துள்ளனரா.?! லிஸ்ட் இதோ..,

நடிகர் சூர்யா தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தனது திரைப்படத்திற்கு நல்ல ஒபெனிங் கிடைக்கும் அளவுக்கு தன்னை ஒவ்வொரு திரைப்படத்திலும் மெருகேற்றி உள்ளார். சில வருடங்களாக பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்த சூர்யாவுக்கு,

அண்மையில் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் OTT , தியேட்டர் என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்து அவர் நடிக்கும் இயக்குனர் பாலாவுடனான திரைப்படம் மற்றும்,  வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படம் ஆகிய படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால், சூர்யா ஆரம்ப காலகட்டங்களில் ஓர் ஹிட்டிற்காகவும் , நல்ல நடிப்பை வெளிப்படுத்தவும் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் விஜயுடன் இணைந்து, நேருக்கு நேர், பிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளர் அதே போல கேப்டன் விஜயகாந்த் உடன் பெரியண்ணா படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – மகன் ஜோடியை தன்வசம் இழுத்து பிடித்த தந்தை.! அது என்ன பொண்ணா? போண்டா டீயா.?! இதோ அந்த வீடியோ..

விஜயகாந்த் உடன் இந்த ஒரு படம் தான் சூர்யா இணைந்து நடித்துள்ளார் என நினைத்திருக்கையில், சூர்யா 3 படங்களில் விஜயகாந்த் படங்களில் நடித்துள்ளாராம். அதாவது, முதலில் SA சந்திரசேகர் இயக்கிய புதுயுகம் படத்தில் சூரியவின் தந்தை சிவகுமார் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து நடித்திருப்பர். அதில் ஒரு சிறிய வேடத்தில் சிறுவனாக சூர்யாவை தான் இயக்குனர் நடிக்க வைத்தாராம். அனால் பிறகு அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டனவாம். இது பற்றி உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.

அதன் பிறகு தான் பெரியண்ணா படத்தில் சூர்யா, விஜயகாந்த் உடன் இணைந்து நடித்திருப்பார். அதன் பிறகு மாயாவி எனும் சூர்யா படத்தில் விஜயகாந்த் ஒரு சிறிய கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருப்பார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top