அருவா பக்கத்துல தான் இருக்கு., வேணும்னா எடுத்துருவேன்.! பத்திரிகையாளரை பதற விட்ட ஹரி.!

by Manikandan |
அருவா பக்கத்துல தான் இருக்கு., வேணும்னா எடுத்துருவேன்.! பத்திரிகையாளரை பதற விட்ட ஹரி.!
X

நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆறு, வேல் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் சிங்கம். இந்த திரைப்படம் இந்திய சினிமாவே அதிரும் வண்ணம் மிக பெரிய வெற்றி பெற்றது. நிறைய மொழிகளில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா, சிங்கம் இரண்டாம் பாகம், சிங்கம் மூன்றாம் பாகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும், சிங்கம் முதல் பாகம் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை இந்த திரைப்படங்கள் ஏற்படுத்தவில்லை.

அதன்பிறகு மீண்டும் சூர்யா இயக்குனர் ஹரி 'அருவா' எனும் திரைப்படத்திற்காக என இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் திரைப்படம் ஏதோ சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு இயக்குனர் ஹரி அருண் விஜய்யை நாயகனாக வைத்து யானை திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் ஒருவர் அருவா படத்தின் கதைதானா யானை திரைப்படத்தின் கதை என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்,

இதையும் படியுங்களேன் - ஷ்ஷ்., சத்தமில்லாமல் அமெரிக்காவில் சாதித்து வரும் நெப்போலியன்.!? பின்னணியில் அந்த சோக நிகழ்வு.!

உடனே இயக்குனர் ஹரி அருவா கதை வேறு யானை கதை வேறு அருவா இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை வேண்டுமென்றால் எடுத்துவிடலாம் என்று பதில் கூறி பத்திரிக்கையாளரை பதற வைத்துவிட்டார் இயக்குநர் ஹரி.

யானை திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மீண்டும் இயக்குனர் ஹரி தான் ஒரு வெற்றி பட இயக்குனர் என்பதை நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஆக்சன் மட்டுமன்றி சென்டிமேட் நிறைந்ததாகவும் இருக்கும் என்று படத்தின் டிரைலர் காட்டியுள்ளது.

Next Story