Categories: latest news

சூர்யான்னா பாலிவுட்ல யாருக்கும் தெரியாது போல!.. அந்தளவுக்கு லோகேஷ் சம்பவம் பண்ணியிருக்காரே!…

நடிகை ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடிப்பில் இன்று வெளியான ஷைத்தான் படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று இரவு திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார்.

முன்னதாக மும்பையில் நடைபெற்ற ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சச்சின் பவுலிங்கிற்கு சூர்யா பேட்டிங் பண்ண வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. தொடர்ந்து நடிகர் சூர்யா சென்னையில் இல்லாமல் மும்பையில் தான் தங்கி வருகிறார்.

இதையும் படிங்க: இது சினிமாவுக்கு ஏத்த மூஞ்சியா? எங்க உருப்பட போகுது.. ஜெயலலிதாவின் முகத்துக்கு நேராக கூறிய இயக்குனர்

மனைவி ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மும்பை புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் ரோலக்ஸ், ரோலக்ஸ் சார் ஒரு போட்டோ என்றே சூர்யாவை அழைத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

இதையும் படிங்க: முதுகு தண்டுல பிரச்சனைன்னு சொன்னாங்க!.. இப்போ மூளையில பாதிப்பா?.. ஐசியூவில் இருக்கிறாரா அஜித்?

ரோலக்ஸ் என சூர்யாவை வைத்து தனிப் படத்தையே லோகேஷ் கனகராஜ் இயக்கவும் விக்ரம் 3 படத்தில் அவர் தான் மெயின் வில்லன் என்றும் கூறினார். இந்நிலையில், பாலிவுட்டில் பலருக்கும் சூர்யா என்பதை விட ரோலக்ஸ் ஆகவே அவர் அறிமுகமாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியில் பிசியாகி வரும் சூர்யா வாடிவாசல், ரோலக்ஸ் படங்களில் எல்லாம் எப்போது நடிப்பார்? என்றும் தெரியவில்லை. மீண்டும் தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகாவை பார்க்க முடியுமா? என்றே ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியாக உள்ள கங்குவா திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளையும் சூர்யா அங்கே பார்த்து வருகிறார்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

13 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

20 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

22 hours ago