சூர்யாவுக்கு ஐஸ் வைத்து நினைத்ததை முடித்த கார்த்தி… வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும்!!
நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தி, “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்த கார்த்தி, அதனை தொடர்ந்து “பையா”, “நான் மகான் அல்ல” போன்ற திரைப்படங்களின் மூலம் இளம் பெண்களின் கனவுகண்ணனாக திகழ்ந்தார்.
சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் வந்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். அவரது நடிப்பு வந்தியதேவன் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் மிகவும் கச்சிதமாக இருந்ததாக சினிமா விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
கார்த்தி நடிப்பில் உருவான “சர்தார்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தில் கார்த்தி பல வேடங்களில் வருகிறார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
கார்த்தி நடிக்க வருவதற்கு முன்பு மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தார் என்ற தகவலை நம்மில் பலர் அறிந்திருப்போம். இதனை தொடர்ந்து கார்த்தி குறித்த மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம்.
சூர்யா நடிகரான போது, கார்த்தி தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் கார்த்தி தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில்தான் பயணம் செய்வாராம்.
“பேருந்தில் செல்வதை விட ஒரு காரில் சென்றால் நன்றாக இருக்குமே” என்று நினைத்த கார்த்தி, ஒரு நாள் சூர்யாவிடம் “நான் கல்லூரிக்கு தினமும் பேருந்தில்தான் செல்கிறேன். அதற்கு நான் வருத்தப்படவில்லை. ஆனால் நீ பெரிய நடிகன். ஒரு பெரிய நடிகனின் தம்பி பேருந்தில் செல்கிறான் என்று உன்னை யாரும் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது” என்று ஐஸ் வைப்பது போல் பேசியிருக்கிறார். உடனே சூர்யா, அடுத்த நாளே கார்த்திக்கு கார் வாங்கி கொடுத்துவிட்டாராம். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் என்பது இதுதானா!!