
Cinema News
வெற்றிமாறனிடம் சூர்யா போட்ட கண்டிஷன்… சுதா கொங்கராவுக்கு அடித்த லக்?.. என்னவா இருக்கும்?
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. ஒரு வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக “கங்குவா” திரைப்படத்தை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். சூர்யா நடிக்கும் முதல் வரலாற்று ஃபேண்டசி திரைப்படம் இதுதான் என்பதால் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Vaadivaasal
இதனை தொடர்ந்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் ஒரு வருடத்திற்கே முன்பே நடந்து விட்டது. ஆனால் வெற்றிமாறன், “விடுதலை” திரைப்படத்தில் மிகவும் பிசியாக இருந்ததால் “வாடிவாசல்” திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை.

Vetrimaaran
தற்போது “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்துவிட்டது. எனினும் இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளதால் தற்போது மீண்டும் “விடுதலை” திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி இருக்கிறார் வெற்றிமாறன்.
இதனிடையே சுதா கொங்கரா தற்போது சூர்யாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். அதாவது வெற்றிமாறன் “வாடிவாசல்” திரைப்படத்தை விரைவில் முடிப்பதாக இருந்தால் மட்டுமே அத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப்படி இல்லை என்றால் சுதா கொங்கரா திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறாராம்.

Sudha Kongara
வெற்றிமாறனை பொறுத்தவரை மிகவும் நிதானமாக ஒரு திரைப்படத்தை படமாக்குவார். “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் ஒரு மாதமே திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னாளில் ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. ஆதலால் சூர்யா, “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் விஜயகாந்த் மாதிரி லெஜண்ட் சரவணன்!.. தங்கமான மனுசனா இருப்பார் போல…