Connect with us
suriya

Cinema News

மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா.. இயக்குனர் யார் தெரியுமா?….

சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார்.

இப்படம் கடந்த 4ம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் சிவா. இவரின் லைன் அப்பில் சூர்யா இருக்கிறார். அண்ணாத்த படத்தில் சிவா கமிட் ஆனதால், ரஜினிக்காக விட்டுக்கொடுத்தார் சூர்யா. தற்போது அடுத்து சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

suriya

சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த சிவா ‘சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படங்களை பார்த்தேன். இரண்டுமே மிகச்சிறந்த படங்கள். அடுத்து சூர்யாவுடன் இணைய ஆர்வமாக இருக்கிறேன். அவருக்காக செம சுவாரஸ்யமான கதையை தயார் செய்து வைத்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனத்தெரிகிறது. சூர்யா ஏற்கனவே பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், 7ம் அறிவு, மாற்றான், மாசு என்கிற மாசிலாமணி, 24 ஆகிய படங்கள் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அவர் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top