கங்குவா முதல் வேள் பாரி வரை!.. சரித்திர கதைகள் பக்கம் ஒதுங்கிய சூர்யா!.. லிஸ்ட் பெருசா போகுதே!..

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யா துவக்கத்தில் சாக்லேட் பாயாக நடித்தாலும் நந்தா, காக்க காக்க, பிதாமகன் என வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது.

காதல், சண்டை காட்சி, போலீஸ் அதிகாரி வேடம் என மாறி மாறி நடித்தார். அதிலும், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் சண்டை காட்சி விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்தது. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இது சரித்திர கதை. ஹாலிவுட் பட ஸ்டைலில் பல வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை இது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தப்பு செய்யும் தனுஷ்!… கேப்டன் மில்லர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா?

எனவே, சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. முதல் பாகம் வருகிற கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகவுள்ளது. கங்குவா 2 உருவாவதற்கு முன்பே ஹிந்தியில் கர்ணா என்கிற சரித்திர படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இது சிவாஜி நடித்த கர்ணன் கதாபாத்திரத்தின் கதை ஆகும்.

kanguva

பாலிவுட் பட இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இப்படத்தை இயக்கவுள்ளார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. இது சூர்யா நடிக்கும் முதல் நேரிடையான ஹிந்தி படமாகும். முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாம் பாகவும் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: கண்ணாடி புடவையில் மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!.. ஜூம் பண்ணி பாத்து ரசிக்குறாங்களே!..

3வதாக சூர்யா நடிக்கும் சரித்திர கதைதான் வேள்பாரி. சரித்திர பின்னணியை கொண்ட இந்த நாவலை சினிமாவாக எடுக்கும் உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சூர்யாவரின் அடுத்த கர்ணா படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளது. மொத்தத்தில் தொடர்ந்து சூர்யா நடிக்கப்போகும் படங்கள் எல்லாமே சரித்திர கதைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it