கொஞ்சம் தாமதமாகி இருந்தால் 60 வயது பாட்டி அதோ கதிதான்.! சூர்யா படத்தின் தியேட்டர் சம்பவம்.!
சூர்யா நடிப்பில் சூரரை போற்று, ஜெய்பீம் திரைப்படத்தின் அமோக வரவேற்பை தொடர்ந்து, தற்போது தியேட்டரில் வெளியாகியிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக இப்படம் ஆழமாக பேசியுள்ளது. மேலும், குடும்ப சென்டிமென்ட் திரைப்படமாகவும் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தியேட்டரிலும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.
பொதுவாக பாண்டிராஜ் திரைப்படங்களுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். எல்லாம் பசங்க, கடைக்குட்டி சிங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற குடும்ப திரைப்படங்கள் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியானதால் வந்த விளைவு.
திருநெல்வேலியில் உள்ள பிரபல தியேட்டரில் அதேபோல 60 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி எதற்கும் துணிந்தவன் படத்தை பார்க்க வந்துள்ளார். அந்த படத்தின் இறுதிக் காட்சியை பார்த்து அந்த பாட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி தேம்பி அழுதுள்ளாராம்.
இதையும் படியுங்களேன் - கமலுக்காக தான் நான் செஞ்சேன்! ஆனால் அந்தாளே என்னை கைவிட்டுட்டார்.! விளாசும் சினிமா பிரபலம்.!
இதில் அவருக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டு உடனடியாக தியேட்டரில் இருந்து வெளியே வரவழைக்கப்பட்டு அந்த பாட்டிக்கு உரிய முதலுதவி செய்து பின்னர் அந்த பாட்டியை பழைய நிலைமைக்கு கொண்டுவந்துள்ளனர் அந்த பாட்டியின் உறவினர் மட்டும் தியேட்டர் நிர்வாகத்தினர்.
உண்மையில் இப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் அவ்வளவு ஆழமாகவும் உணர்ச்சிவச மிக்கதாகவும் இருக்கிறது என்பதே நிஜம். இந்த படம் சூர்யாவுக்கு மற்றுமொரு சிறந்த படமாக அமைந்துள்ளது நிதர்சமான உண்மை.