Categories: latest news tamil cinema gossips

விக்ரம் பட கௌரவ தோற்றம்.! இணையத்தில் கெஞ்சும் சூர்யா ரசிகர்கள்.! இது தான் காரணமா.?!

தமிழ் சினிமாவின் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு திரைப்படம் என்றால் அது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் தான். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை லோகேஷ் கனகராஜ் கூறினார். நடிகர் சூர்யா இதில் இறுதிக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவலை அவர் கூறினார்.

மேலும், சூர்யா நடித்து இருப்பது விக்ரமின் அடுத்த பாகத்திற்கான லீடு (சிறிய தொடக்கம்) என கூறப்படுகிறது. இதனையொட்டி இன்று இணையத்தில் மிகவும் வைரலாக ஒரு வேண்டுகோள் பரவி வருகிறது.

இதையும் படியுங்களேன் – பிரியங்கா மோகனை தட்டி தூக்கிய தனுஷ்.!? இது ஒன்னும் நம்மாளுக்கு புதுசில்லையே..,

சூர்யா ரசிகர்கள் இணையத்தில், ‘விக்ரம்’ படத்தில் சூர்யா வரும் காட்சிகளை தியேட்டரில் போனில் படம் பிடித்து பகிர்ந்து கொள்ள வேண்டாம். அப்படி செய்தால், சூர்யாவின் கதாபாத்திரம் லீக் ஆகிவிடும். அதனால் சூர்யா வரும் காட்சிகளை தயவுசெய்து இன்டர்நெட்டில் யாரும் பதிவிட்டு பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

உண்மையில் அப்படி பதிவிடாமல் இருந்தால் மட்டுமே படத்தின் மீதான சுவாரஸ்யமும்ம், எதிர்பார்ப்பும் படம் பார்க்கும் வரையில் குறையாமல் இருக்கும். இல்லை என்றால் சூர்யாவின் கதாபாத்திரம் எந்தவித சர்ப்ரைஸும் கொடுக்காது.

Published by
Manikandan