தமிழ் புத்தாண்டு தினத்தன்று தனது ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நடிகர் சூர்யா கங்குவா படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி இல்லாததால் சூர்யா ரசிகர்கள் மேலும் கடுப்பாகி விட்டனர்.
இந்த ஆண்டு வெளியாக உள்ள படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஜூன் மாதம் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளியாகப் போவதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: கோட் படம் வெங்கட் பிரபு யூனிவர்ஸா!.. அதுக்குத்தான் அஜித், சூர்யா, சிம்பு பட ரெஃபரன்ஸ் இருக்கா?..
கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுதபூஜை பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன், ரஜினியை தொடர்ந்து தளபதி விஜய் படத்தின் ரிலீஸ் தேதியுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் நான்தான் என வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி கோட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு இதேபோல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூர்யாவின் கங்குவா மற்றும் அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: சரக்கடித்து விட்டு ஷூட்டிங்!. கடுப்பான இயக்குனர்!.. மனிஷா கொய்ராலாவுக்கு மார்க்கெட் போனது இப்படித்தான்!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தளபதி விஜய் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களன விசில் போடு பாடலைத் தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தனது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்த கங்குவா படத்திலிருந்து அட்டகாசமான போஸ்டர் ஒன்றை சூர்யா வெளியிட்டுள்ளார்.
கங்குவா படத்தின் டீசரில் கூட நிகழ்கால சூர்யாவை காட்டாத நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில் பண்டையகால சூர்யா கையில் கத்தியுடன் நிற்பது போலவும் நிகழ்கால சூர்யா துப்பாக்கி ஏந்தி இருப்பது போலவும் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லாததால் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டனர். 2024 ஆம் ஆண்டு கங்குவா வெளியாகிவிடும் என்பதை மட்டும் சூர்யா அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அருமையான வாய்ப்பை எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்த ஜெய்சங்கர்… எந்தப் படத்திற்கு தெரியுமா?
பிரம்மாண்ட படம் என்பதால் சிஜி காட்சிகளுக்காக கூடுதல் மெனக்கெடல் செய்ய வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே படத்தின் ரிலீஸ் தேதியை இன்னமும் சூர்யாவால் லாக் செய்ய முடியவில்லை என்றே தெரிகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு கங்குவா மற்றும் விடாமுயற்சி போட்டியாக வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…