Surya: அதே ஸ்டேஷன்ல காத்திருக்கேன்!.. ராஜமவுலிக்கிட்ட துண்டு போட்டு வச்ச சூர்யா!... ஓவர் பீலிங்கா இருக்கே?!...

by ramya suresh |
Surya: அதே ஸ்டேஷன்ல காத்திருக்கேன்!.. ராஜமவுலிக்கிட்ட துண்டு போட்டு வச்ச சூர்யா!... ஓவர் பீலிங்கா இருக்கே?!...
X

#image_title

கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து சூர்யா மனம் விட்டு பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்திருக்கிறார்கள். மேலும் பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: Dhanush55: பூஜை போட்டாச்சு!… சொன்ன மாதிரியே தட்டி தூக்கிட்டாரே… தனுஷ் 55 படத்தின் பரபர அப்டேட்!…

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இப்படத்தை 2 பாகங்களாக இயக்குனர் சிறுத்தை சிவா எடுத்து முடித்திருக்கின்றார். முதல் பாகம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள காரணத்தால் படக்குழுவினர் தீவிரமாக ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நடிகர் சூர்யா படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வருகின்றார். அந்த வகையில் நேற்று தெலுங்கில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

kanguva

kanguva

இதில் இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் பல விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டார்கள். அதில் நடிகர் சூர்யா இயக்குனர் ராஜமவுலியிடம் அவரின் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து வருத்தத்துடன் பேசி இருந்தார். நான் அந்த ட்ரெயினை மிஸ் பண்ணிட்டேன். ஆனால் இன்னும் அதே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒருநாள் அந்த ரயிலை பிடித்து விடுவேன் என்கின்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருந்தார்.

ராஜமவுலி இயக்கத்தில் மகதீரா திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் சூர்யா தான் நடிக்க இருந்தது. அதன் பிறகு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. பின்னர் அந்த திரைப்படத்தை ராம் சரணை வைத்து ராஜமௌலி இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய ராஜமௌலி மகதீரா பட வாய்ப்பு நீங்கள் மிஸ் பண்ணவில்லை.

நான்தான் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டேன் என்று கூறியவுடன் நடிகர் சூர்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும் படக்குழுவினருக்கும் கங்குவா திரைப்படத்திற்கும் இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story