Cinema News
உங்க பஞ்சாயத்தே வேணாம்.!.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு….
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றிருந்தாலும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
ரூ.5 கோடி நஷ்ட ஈடுகேட்டு பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு, சூர்யா நடிப்பில் வெளியாகு திரைப்படங்களை வெளியிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம், அவர் வெளியே நடமாட முடியாது என்றெல்லாம் பாமகவினர் மிரட்டல்கள் விடுத்தனர். மேலும், சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தார்.
இந்த விவகாரம் இப்படி நிற்காமல் சென்று கொண்டிருந்த நிலையில், ஜெய்பீம் பட இயக்குனர் ஜானவேல் ராஜா ஜெய்பீம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துர்தஷ்டவசமானது. பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே சூர்யாவின் நோக்கம் எனக் கூறியிருந்தார். மேலும், யார் மனமேனும் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்த பிரச்சனை ஓயவில்லை. சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இயக்குனர் வருத்தம் தெரிவித்த பின் இந்த சர்ச்சை முடிந்தவுடன் என எதிர்பார்த்த சூர்யாவுக்கு இது அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும், எப்போதும் வீட்டின் முன்பு 2 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள். அவர் எங்கே சென்றாலும் காரில் ஏறி அவருடன் அமர்ந்து விடுகிறார்கள். இது அவரின் தனிப்பட்ட பிரைவசியை பாதிப்பதாக உணர்கிறாராம்.
எனவே, சில நாட்கள் ஆகட்டும். இந்த பிரச்சனையின் சூடு முடிந்தவுடன் சென்னை திரும்பலாம் என கருதி குடும்பத்துடன் நேற்று இரவே துபாய் கிளம்பி சென்றுவிட்டாராம். சில நாட்கள் அவர் அங்கு தங்கிவிட்டு சென்னை திரும்புவார் என தெரிகிறது.