Suriya ghajini movie: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. அதன்பின் நந்தா, பிதாமகன், காக்க காக்க போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றி சூர்யாவை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.
நடிகை ஜோதிகாவுடன் பல படங்களிலும் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல், ஜெய் பீம், சூரரைப்போற்று போன்ற சிறந்த படங்களையும் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார்.
இவர் நடிப்பில் கங்குவா படம் உருவானபோது நிறைய பில்டப் கொடுத்தார்கள். படம் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார். ஆனால், சூர்யாவை பிடிக்காத ஒரு குரூப் படத்தை பற்றி மோசமான விமர்சனங்களை சொல்லி படத்தையே காலி செய்தார்கள். இதனால் இப்படம் தோல்வி அடைந்தது.

அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்துவிட்டு இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் சூர்யா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நான் நடித்த கஜினி படம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
அந்த படத்தில் ‘கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடாது.. இஷ்டப்பட்டு வேலை செய்யணும்’ என நான் ஒரு வசனம் பேசுவேன். படத்தை பார்த்துட்டு ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு தம்பி ஒரு ரெஸ்டாரண்ட் மேனேஜர் ஆயிட்டாரு. கேட்டா ‘உங்க படத்துல இருந்துதான் அந்த ஐடியா வந்துச்சுன்னு சொன்னாரு’. இது போல சில வசனங்கள் கூட ஒருவரின் வாழ்க்கையை மாற்றும்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகியுள்ளது. இதுவரை இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. கங்குவா படத்தை குறி வைத்து பலரும் தாக்கிய நிலையில் ரெட்ரோ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.