Connect with us
suriya

Cinema News

சுதா கொங்கராவையும் விட்டு வைக்காத சூர்யா!.. இப்படியே போனா சரியா வருமா?!..

சில நடிகர்கள் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களையே ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டு விடுவார்கள். அதில், சூர்யா மிகவும் முக்கியமானவர். சூர்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் வசந்த. அவரின் இயக்கத்தில் நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் என 2 படங்களில் மட்டுமே நடித்தார் சூர்யா.

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பின் வசந்தின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவில்லை. அதேபோல், சூர்யாவை மெருகேற்றியது இயக்குனர் கவுதம் மேனன். காக்க காக்க படத்தில் ஒரு ஸ்டைலீசான ஹீரோவாக காட்டியிருந்தார். அந்த படமும் வெற்றி.

இதையும் படிங்க: வாங்க படம் பண்ணுவோம்னு சொன்னார்!.. ஆனா மனுசனை பார்க்கவே முடியல!.. அஜித் பற்றி புலம்பும் இயக்குனர்…

அதன்பின் அவரின் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் மட்டுமே நடித்தார் சூர்யா. 3வதாக துருவ நட்சத்திரம் படத்தில் இருவரும் இணைந்தனர். ஆனால், சில காரணங்களால் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார் சூர்யா. அதன்பின் பல வருடங்கள் கழித்து அந்த கதையை விக்ரமை வைத்து இயக்கினார் கவுதம் மேனன். ஆனால், இப்போது வரை அப்படம் வெளியாகவில்லை.

சேது படம் பார்த்துவிட்டு பாலாவின் காலில் விழுந்த சூர்யா ‘என்னை எப்படியாவது உங்கள் இயக்கத்தில் நடிக்க வையுங்கள்’ என கேட்டார். அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா. எப்படி நடிக்க வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும்? என எல்லாவற்றையும் அந்த படத்தில்தான் கற்றுகொண்டார் சூர்யா. அதன்பின் பாலா இயக்கிய பிதாமகன் படத்திலும் நடித்தார். அதோடு சரி. 3வதாக வணங்கான் படத்தில் இருவரும் இணைந்தனர்.

ஆனால், அப்படத்திலிருந்தும் விலகினார் சூர்யா. அதன்பின் அருண்விஜயை வைத்து இயக்கி வருகிறார் பாலா, சூர்யாவை ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியர் இயக்குர் ஹரி. சூர்யாவை வைத்து ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை இயக்கியவர். சில வருடங்களுக்கு முன்பு அவரின் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து வேலைகள் நடந்தது.

இதையும் படிங்க: என்னை திட்டுனா என்னை வீழ்த்திட முடியுமா?.. டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி.. ராதாரவி அதிரடி வீடியோ!

ஆனால், கதை சரியில்லை என சொல்லி அவரையும் கழட்டிவிட்டார் சூர்யா. இப்போது அந்த வரிசையில் சுதா கொங்கராவும் இணைந்திருக்கிறார். சூரரைப்போற்று படத்துக்கு பின் புறநானுறு என்கிற கதையை சூர்யாவுக்காக எழுதினார் சுதா கொங்கரா. ஆனால், கதையில் மாற்றங்களை தொடர்ந்து சூர்யா சொல்லி வந்ததால் விரக்தி அடைந்த சுதா ‘இது வேண்டாம்’ என முடிவு செய்துவிட்டார்.

notice

அதனால்தான் சமீபத்தில் இந்த படம் துவங்க தாமதமாகும் என அறிக்கை விட்டார் சூர்யா. உண்மையில் இப்படம் டிராப் என்றே சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ந்து தன்னை வளர்த்துவிடும் இயக்குனர்களை சூர்யா கழட்டிவிட்டுக் கொண்டே வருவது அவருக்கு நல்லதல்ல என்கிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள்.

இதையும் படிங்க: விஜய் புயலெல்லாம் எடுபடல!.. கட்டுக்கடங்காமல் போகும் கங்குவா டீசர்!.. இத்தனை மில்லியன் வியூஸா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top