கறார் காட்டிய சூர்யா...கையை பிசையும் பாலா....இது நமக்கு செட்டே ஆகாதே....

by சிவா |
suriya
X

இயக்குனர் பாலா அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தி தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியை கரைப்பார். படப்பிடிப்பில் எல்லோரும் காத்திருக்கும் போது ‘இன்னைக்கு மூட் இல்ல.. நாளைக்கு எடுப்போம்’ எனக்கூறிவிட்டு சென்று விடுவார். இதனால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமே ஏற்படும். அதோடு, முன்னேற்பாடு எதுவுமின்றி படப்பிடிப்பிற்கு வந்து தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எடுப்பார். இதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

அதோடு, விக்ரமின் மகனை வைத்து அவர் கடைசியாக இயக்கிய ‘வர்மா’ பல பஞ்சாயத்து நடந்து படமே வெளியாகவில்லை. அதோடு, அதே கதையை வேறு இயக்குனரை வைத்து எடுத்து வெளியிட்டனர். அந்த சம்பவத்திற்கு பின் பாலா இன்னும் எந்த படமும் இயக்கவில்லை.

suriya

இந்நிலையில், சூர்யாவின் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சூர்யா தயாரித்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் இப்படத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன். அதைத்தாண்டி ஒரு நாள் கூட கொடுக்க மாட்டேன். படத்தை எடுத்து முடித்து விடுங்கள் என பாலாவிடம் கறாராக கூறிவிட்டாராம் சூர்யா.

ஆனால், இது நமக்கு செட்டே ஆகதே என பாலாவுக்கு தோன்றினாலும், வேறு வழியின்றி முழுக்கதை மற்றும் காட்சிகளை எழுதி முடித்துவிட்டு படப்பிடிப்பு செல்லும் வேலையில் பாலா இறங்கியுள்ளாராம்.

Next Story