கடுப்பாகி மறைமுகமா திட்டிய சூர்யா...கண்டும் காணாமல் இருந்த பாலா.. பணம் போட்டவராச்சே!...

suriya
இயக்குனர் பாலா வித்தியாசமாக படம் எடுப்பவர் என பெயர் எடுத்தது போலவே நடிகர், நடிகளை பெண்டு கழட்டிவிடுவார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
பாலாவிடம் ஒரு திட்டமிடலே இருக்காது. முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும் பழக்கம் அவருக்கு கிடையவே கிடையாது. ஒரே காட்சியை பலமுறை எடுப்பார். அடுத்தநாள் மீண்டும் வந்து அதையே எடுப்பார். பல நாட்கள் படப்பிடிப்பு நடத்துவார். அவர் எப்போது முடிக்கிறாரோ அதுவரை நடிகர்கள் வேறு படங்களில் நடிக்காமல் காத்திருக்க வேண்டும்.

bala
அதனால்தான் பெரும்பாலான நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவேதான், ஆர்யா, விஷால், அதர்வா என இவர்களை வைத்தே படம் எடுப்பார் பாலா. அல்லது அவர் சொல்வதை கேட்டு நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்குவார்.
இதையும் படிங்க: ‘நானும் ரௌடி தான்’ படத்தை 100 முறை பார்த்த பாலிவுட் நடிகை!.. விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?..
கடந்த சில வருடங்களாக அவரின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை கவரவில்லை. கடைசியாக பாலா இயக்கிய வர்மா படம் திருப்தி இல்லை எனக்கூறி தயாரிப்பாளர் படத்தை வெளியிடவே இல்லை.

surya bala
இந்நிலையில்தான் நடிகர் சூர்யா பாலாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். நந்தா, பிதாமகன் என தன்னை வளர்த்துவிட்டவர் என்பதால் சூர்யா இந்த முடிவை எடுத்தார். அப்படி உருவான திரைப்படம்தான் வணங்கான். பட அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் துவங்கப்பட்டது.
ஆனால், அவரிடமும் அதே வேலையை காட்டினார் பாலா. கதை நகரும் ஸ்டைல் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. அதோடு, பாலாவின் நடவடிக்கைகளும் அவருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. எனவே, தொடர்ந்து படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளாமல் சென்னை திரும்பிவிட்டார். அதோடு, வணங்கான் படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டார்.

suriya
சில சமயம் படப்பிடிப்பில் கடுப்பாகி பாலாவை திட்டமுடியாமல் அவரின் உதவியாளர்களை திட்டுவாராம் சூர்யா. நம்மளைத்தான் திட்டுகிறார் என தெரிந்தும் கண்டும் காணாமலும் போய்விடுவாராம் பாலா.
வணங்கான் படத்துக்கு சூர்யாதான் தயாரிப்பாளர். எனவே, பாலா அடக்கி வாசித்திருப்பார் என சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.