நீ சினிமாவுல நடிக்க போறியா?!..நல்லாத்தான போயிட்ருக்கு!.. சூர்யாவை கிண்டலடித்தது யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவரின் மூத்த மகன் சரவணன், இளைய மகன் கார்த்தி. சரவணனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. அவர் சினிமாவுக்கு செட்டே ஆக மாட்டார் என சிவக்குமாரே பலரிடமும் கூறியுள்ளார். ஏனெனில், சரவணன் அதிகம் பேசவே மட்டார்.
வசந்த இயகத்தில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிக்க நேருக்கு நேர் என்கிற திரைப்படம் உருவானது. மணிரத்னம் அப்படத்தை தயாரித்தார். சில நாட்கள் இப்படத்தில் நடித்த அஜித் சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின், ஒருநாள் சிவக்குமாரை பார்க்க வசந்த் வந்தபோது சரவணனை பார்த்ததும் வசந்துக்கு பிடித்துப்போனது. சிவக்குமாரை கன்வின்ஸ் செய்து சரவணன் என்கிற பெயரை சூர்யா என மாற்றி நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் செய்தார். இப்படித்தான் சரவணன் சூர்யாவாக மாறினார்.
சில படங்களில் தடுமாறினாலும், நந்தா, காக்க காக்க, பிதாமகன் என விதவிதமான வேடங்களில் நடித்து நடிப்பில் தன்னை மெருகேற்றி ஒரு முழு நடிகராக மாறினார் சூர்யா. சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரியாக கர்ஜித்தார். சூரரைப்போற்று படத்தில் லட்சியம் உள்ள இளைஞனாக மனதை கவர்ந்தர். ஜெய் பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்திற்கு உதவும் வழக்கறிஞராக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
ஆனால், இதே சூர்யா நடிக்க முடிவெடுத்தபோது பல கேலி கிண்டல்களை சந்தித்தார். டிகிரி முடித்துவிட்டு ஒரு செனை அம்பத்தூரில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸில் 3 வருடங்கள் பணிபுரிந்தார். அவர் சிவக்குமாரின் மகன் என்பது யாருக்கும் தெரியாது.
நேருக்கு நேர் படத்தில் நடிப்பது என உறுதியானதும் சக ஊழியர்களிடம் ‘நான் வேலையை விடபோகிறேன்.. சினிமாவில் நடிக்க போகிறேன்’ எனக்கூறியதும் அவர்கள் எல்லாம் சிரித்தார்களாம். ‘என்ன சரவணா?... உனக்கு எப்படி சினிமா செட்டாகும். உன்னை வைத்து யார் படம் எடுக்க போகிறார்கள்?’ என கிண்டலடிக்க அப்போதுதான் தான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதையே அவர்களிடம் சொன்னாராம் சூர்யா.
இதையும் படிங்க: நான் முதல்ல நடிக்கிறப்பவே இதுக்காக திட்டுனாரு! – சூரி குறித்து அப்போதே யூகித்த விஜய் சேதுபதி!