ராகவா லாரன்ஸ் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா... மீண்டும் ஒரு ரோலக்ஸா..?

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உலகநாயகன் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில் நடித்த விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா நடித்தார். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் சிறிது நேரம் வந்தாலும் 'ரோலக்ஸ்' என்ற கேரக்டரில் தெறிக்க விட்டார். அது விக்ரம் 2ம் பாகத்தில் முழுவடிவத்துடன் வர உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுதி தயாரித்து வருகிறார். பென்ஸ் என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

லோகேஷ் உடன் மீண்டும் சூர்யா கைகோர்த்துள்ளதால் இது இன்னொரு ரோலக்ஸா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் உண்டாகிறது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படங்கள் என்றால் தெறிக்க விடுவார். சமீபத்தில் ராகவா லாரன்ஸ்சும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்த மார்க் அண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

நடிகர் ராகவா லாரன்ஸ் எப்போதும் ஆக்ஷன் த்ரில்லர் படங்கள் என்றால் கலக்கி விடுவார். அவரது முனி மற்றும் காஞ்சனா படங்களே இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அதே போல கேரக்டருக்காக தன் உடலையும் வருத்திக் கொண்டு நடித்து அசத்துபவர் சூர்யா.

Benz

Benz

அவரது பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் அவர் நடித்து வரும் 'கங்குவா' படம் இப்போதே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. 'ஏழாம் அறிவு', 'பிதா மகன்', 'ஜெய் பீம்' போன்ற படங்களில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் அசர வைத்தார்.

இதையும் படிங்க... 80ஸ் மட்டுமல்லாம 2கே கிட்ஸ்களையும் தட்டிதுக்கிய டி.ராஜேந்தர்… யாருமே அறியாத அந்த சில தகவல்கள்

அந்தவகையில் ராகவா லாரன்ஸ்சும், சூர்யாவும் இணைந்தால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பென்ஸ் படத்திற்கு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

 

Related Articles

Next Story