சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மொத்த கதையுமே இதுதான்.! இப்படி லீக் ஆயிடுச்சே.!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகயுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தன் படத்தின் டிரைலர் மூலமாகவே இது தான் படத்தின் கதகளம், இதை பார்த்து வாருங்கள் என்பது போல் காட்டி விடுவார். அதேபோல்தான் இந்த படத்திற்கும் செய்துள்ளார்.
படத்தின் டிரெய்லரில் ஒரு வசனம் வரும் அதாவது சைன்டிஸ்ட்டாக ஆசைப்பட்டான். ஆனால் காலம் அவனை வேறுவிதமாக மாற்றிவிட்டது என சத்யராஜ் கூறுவது போல் அமைந்திருக்கும். இந்த படத்தின் முதல் அரைமணி நேரம் கடைக்குட்டி சிங்கம் பட சாயலில் குடும்பம், சென்டிமென்ட், காமெடி, காதல் என்று கலந்திருக்கும் என தெரிகிறது.
அதன்பிறகு வில்லன் என்ட்ரி. வில்லன் எப்படி சூர்யா குடும்பத்திற்குள் பிரச்னையை நுழைக்கிறார் என்பது போல காட்டப்படும். ஹீரோ சூர்யா சம்பந்தப்பட்ட யாரேனும் ஒருவர் வில்லனால் பாதிக்கப்படுவது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண் அண்ணா என கதறுகிறது. உடனே சூர்யா படுக்கையில் இருந்து திடீரென எழுவது போல காட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவங்களை பற்றி இப்படம் பேசும் என காண்பிக்கப்பட்டுள்ளது. வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக வரும் சரண் இந்த படத்தில் பெண்களை போட்டோ எடுக்கும் போட்டோகிராபராக வருகிறார்.
அவர் புகைப்படம் எடுத்து அதனை வேறு மாற்றி எடிட் செய்து வில்லன் குரூப்க்குக்கு அனுப்பி விடுகிறார். இதனை வைத்து வில்லன் அப்பெண்களை மிரட்டி, வியாபாரம் செய்வது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன் - விஸ்வரூபம் நான் இயக்க வேண்டிய படம்.! தனுஷால்தான் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாம்.! புலம்பிய இயக்குனர்.!
பெண்களை தவறாக சித்தரித்து அதனை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டும் வில்லன்களை சூர்யா எப்படி எதிர்கொண்டு வில்லன்களைஅழிக்கிறார் என்பது படத்தின் இரண்டாம் பாதியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதான் படத்தின் கதைக்களம் என்பது ட்ரைலரை உற்று பார்க்கையில் நமக்கு தெரிகிறது. இதனை எப்படி தனது திரைக்கதை மூலம் சுவாரஸ்யமாக காண்பிக்க போகிறார் இயக்குனர் பாண்டிராஜ் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ரசிகர்கள் ட்ரைலரை பார்த்து பயந்த ஒரே விஷயம் என்றால் அது சூரி, புகழ் காம்பினேஷன் தான் போல. அந்த என்னமோ நடக்க போகுது என்கிற ஒரு வசனத்தை வைத்துகொன்டே, படத்தில் என்னமோ நடக்க போகுது என கலாய்த்து வருகின்றனர். காமெடி காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறதா அல்லது நெருடல் ஊட்டுகிறதா என்பதையும் நாளை தெரிந்துகொள்ளலாம்.