Categories: latest news

எதற்கும் துணிந்து இறங்கி வெற்றியை ருசித்தாரா சூர்யா?… முழு விமர்சனம்…

சூரரை போற்று, ஜெய் பீம் படத்தின்  OTT வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் தற்போது தியேட்டரில் களமிறங்கிய திரைப்படம் எதற்கும் துணிந்தவன். தியேட்டரில் சூர்யா திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று வெகு நாட்களாகிவிட்டது. அதன் தாகத்தை குறைக்க சூர்யா பக்கா கமர்சியல் கதைக்களத்தை எடுத்து பாதுகாப்பாக களமிறங்கியுள்ளார்.

Also Read

கண்ணபிரான் வக்கீலாக சூர்யாவின் நடிப்பு வெகுவாக ரசிகர்களை ஈர்க்கிறது. அவரது நடிப்பு, வசனம், ஆக்ரோஷமான ஆக்சன் காட்சிகள், தெளிவான வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெறுகிறது.

இதனை அடுத்து, இவருக்கு நிகராக வில்லனிசத்தில் மிரட்டியிருப்பவர் வினய் , பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் கொடூர வில்லனாக ரசிகர்களை மிரட்டுகிறார் வினய்.

 

இதையும் படியுங்களேன் – கண்டுகொள்ளாத சன் பிக்ச்சர்ஸ்.! டிக்கெட் எடுத்து கொடுக்கும் சூர்யா.! என்ன கொடுமை சார்.!

தொடர் பெண்கள் கொலையை கண்டறிய முற்படுகிறார் சூர்யா. அப்போது இதற்கு பின்னால் வினய் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு வழக்கம் போல வில்லன் – ஹீரோ இடையே மோதல் என படம் விறுவிறுப்பாக செல்கிறது.

மற்றபடி, சத்யராஜ், ப்ரியங்கா மோகன் , சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். டி.இமானின் இசை கமர்சியல் படத்திற்கே உரித்தாக கொடுத்துள்ளார்.

தியேட்டரில் வெகுநாட்களாக ஒரு பெரிய ஹிட்டிற்கு ஏங்கி கிடந்த சூர்யாவிற்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நிச்சயம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Published by
Manikandan