Connect with us

Cinema News

அவரோட வேண்டாம்!.. சூப்பர் ஸ்டாரோட மோதினாதான நம்பர் ஒன் ஆக முடியும்!.. கங்குவா ரிலீஸ் தேதி இதோ!..

அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் தீபாவளிக்கு சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு வழியாக கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் பீரியட் மற்றும் நவீன யுகத்துடன் தொடர்புடைய படமாக பிரம்மாண்டமாக உருவாகியுளந்து.

இதையும் படிங்க: என்னது இது யுவன் போட்ட பாட்டே இல்லையா? அதான் இந்த லட்சணத்துல இருக்கா? பீதியை கிளப்பிய தகவல்

எப்படியாவது பாக்ஸ் ஆபிஸில் தனது கெத்தை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்த சூர்யா இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 3d தொழில்நுட்பத்துடன் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் விடாமுயற்சி படத்துடன் தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அஜித்துடன் மோதினால் எப்படி நம்பர் ஒன் ஆக முடியும் நம்பர் ஒன்னாக உள்ள ரஜினிகாந்துடன் மோதலாம் என்கிற ஐடியாவில் சூர்யா ரிலீஸ் தேதியை லாக் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: குஷ்பூ இட்லினு பேர் வர்றதுக்கு காரணமே இந்த நடிகர்தானாம்.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த குஷ்பூ

இந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி கங்குவார் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் கங்குவா மோத தயாராகி இருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்றும் ஒருவேளை இந்தியன் 2 படம் ஒரு மாதம் தள்ளிப் போனது போல வேட்டையன் தள்ளிப் போகிறதா? அதை அறிந்துக் கொண்டு அந்த தேதியில் சூர்யா கங்குவா படத்தை வெளியிடுகிறாரா? என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன. சூர்யா மற்றும் ரஜினிகாந்த் படங்கள் ஒரே நாளில் மோதினால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கிளாஷ் வெடிக்கும் என்பது உறுதி.

இதையும் படிங்க: எம்.எஸ்.வி கொடுத்த முதல் வாய்ப்பு!.. இப்படி ஆகிப்போச்சே!.. எஸ்.பி.பி வாழ்வில் நடந்த சோகம்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top