மனைவியை பார்த்து அப்படியே காப்பி அடிக்கும் சூர்யா.! அந்த செலவு அவருக்கே மிச்சம்.!
சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களும் அந்த படத்தை வரவேற்க்க காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து சூர்யா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா , தனது அடுத்த பட வேலைகள் குறித்து பேசினார். அப்போது, சூர்யா நடித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதை தெரிவித்தார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்களேன் - என் ரசிகர்கள் இப்படித்தான் இருக்கனும்.! உலகநாயகனை பார்த்து கத்துக்கோங்க.! முழு நீள பட்டியல் இதோ..
இயக்குனர் பாலா படத்தில் சூர்யா நடிப்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சூர்யா இந்த படத்தில் வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இதே போல ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருப்பார். ராதா மோகன் இயக்கத்தில் வெளியான மொழி திரைப்படத்தில் ஜோதிகா இந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருப்பார். தற்போது தனது மனைவியை பாலோ செய்து சூர்யா நடிக்க உள்ளார். ஜோதிகா, மொழி படத்தில் சிறப்பாக நடித்து பலரது பாராட்டுகளை பெற்றிருந்தார். அதே போல சூர்யா பாராட்டுகளை பெறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.