அந்தரத்தில் தொங்கும் பாலாவின் புதிய படம்.!? அடம்பிடிக்கும் சூர்யா.!
நடிகர் சூர்யா நடித்து இறுதியாக OTTயில் வெளிவந்த ஜெய்பீம் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு சிவகுமார் தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது சூர்யாவின் தந்தை சிவகுமார், இயக்குநர் பாலா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதை தெரிவித்தார்.
ஆனால், இதற்கிடையில் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்போ இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இயக்குனர் சிறுத்தை சிவா புதிய படத்திற்கான கதையை எழுதி முடித்து அந்த கதையை சூர்யாவிடம் எடுத்து கூறியதும் ஓகே ஆகிவிட்டதாக பேசபடுகிறது.
ஆனால், இயக்குனர் பாலா கதை சொல்லிவிட்டார் கதை இன்னும் நிறைபெறாமல் இருப்பதால் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதலில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசலுக்கு சூர்யா தயாராக உள்ளார்.
அதற்கிடையில் இயக்குனர் பாலா தனது கதையை இறுதி செய்து சூர்யாவிடம் ஓகே செய்தால் சிறுத்தை சிவா படம் நடிக்கும் போதே ஒரே நேரத்தில் பாலா படத்தின் காட்சிகளையும் நடித்து முடித்துவிடுவார் சூர்யா என கூறப்படுகிறது. இதற்கெல்லாம் பாலா தனது கதையை முழுதாக முடித்தால் தான் நடக்கும் போல.